மேலும் அறிய

Car Colour Trends: மாறாத மவுசு... குறையாத கெத்து! 2025-லும் இந்தியச் சாலைகளின் 'ராஜா' வெள்ளை நிறம்தான்!

Car Colour Trends : BASF நிறங்கள் அறிக்கை 2025-ன் படி, இந்திய மக்களின் தற்போதைய வண்ண விருப்பங்கள் மற்றும் சந்தை நிலவரம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைலேஜ், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் விலை ஆகியவற்றிற்கு இணையாக, ஒரு காரைத் தேர்ந்தெடுப்பதில் அதன் நிறம் முக்கியப் பங்கு வகிக்கிறது. "எந்த நிறம் சிறந்தது?" மற்றும் "மறுவிற்பனையில் எந்த நிறத்திற்கு அதிக மதிப்பு கிடைக்கும்?" என்பது போன்ற கேள்விகள் கார் வாங்குபவர்களிடையே எப்போதும் உண்டு. இந்த நிலையில், BASF நிறங்கள் அறிக்கை 2025-ன் படி, இந்திய மக்களின் தற்போதைய வண்ண விருப்பங்கள் மற்றும் சந்தை நிலவரம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசைக்க முடியாத வெள்ளை:

2025-ஆம் ஆண்டிலும் இந்திய கார் சந்தையில் வெள்ளை நிறமே முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. மொத்த கார் விற்பனையில் 48 சதவீதம், அதாவது விற்பனையாகும் இரண்டு கார்களில் ஒன்று வெள்ளை நிறமாகவே உள்ளது. டாக்ஸி மற்றும் கார்ப்பரேட் பயன்பாடுகளுக்கு இதுவே முதல் தேர்வாக இருப்பது இதன் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். மேலும், வெள்ளை நிற கார்கள் அளவில் பெரியதாகத் தெரிவதுடன், வெப்பத்தைக் குறைவாக உறிஞ்சுவது மற்றும் இரவு நேரப் பயணங்களில் மற்ற வாகனங்களுக்குத் தெளிவாகத் தெரிவது போன்ற நடைமுறைப் பலன்களும் மக்களை இந்த நிறத்தை நோக்கி ஈர்க்கின்றன.

இரண்டாம் இடத்தில் சாம்பல் நிறம்

வெள்ளை நிறத்திற்கு அடுத்தபடியாக 17 சதவீத சந்தைப் பங்களிப்புடன் சாம்பல் (Grey) அல்லது சிமென்ட் நிறம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக பிரீமியம் கார்கள் மற்றும் எஸ்யூவி (SUV) வகை வாகனங்களில் இந்த நிறம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. தூசு படிந்தாலும் எளிதில் தெரியாத தன்மை மற்றும் நவீனமான தோற்றம் ஆகியவை கார் வாங்குபவர்களைச் சாம்பல் நிறத்தைத் தேர்வு செய்யத் தூண்டுகின்றன. இருப்பினும், முதல் இடத்தில் உள்ள வெள்ளை நிறத்தோடு ஒப்பிடும்போது இதன் தேவை பாதிக்கும் குறைவாகவே உள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளி நிறங்களின் சமநிலை

சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் 'டார்க் எடிஷன்' மாடல்கள் காரணமாகக் கருப்பு நிறத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மொத்த விற்பனையில் 10 சதவீதத்தைக் கருப்பு நிற கார்கள் பிடித்துள்ளன. ஸ்டைலான தோற்றத்தை விரும்புவோர் இதைத் தேர்ந்தெடுத்தாலும், பராமரிப்புச் சவால்கள் காரணமாக இதன் வளர்ச்சி சற்று நிதானமாகவே உள்ளது. இதேபோல் 10 சதவீத விற்பனையுடன் வெள்ளி (Silver) நிறமும் கருப்புடன் இணைந்துள்ளது. குறிப்பாக மின்சார வாகன (EV) வாங்குபவர்களிடையே வெள்ளி நிறம் ஒரு புதிய ட்ரெண்டாக உருவெடுத்துள்ளது.

நீலம் மற்றும் சிவப்பு -குறையாத மவுசு

இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கான கார்களில் நீல நிறம் தொடர்ந்து 7 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது. அடர் நீலம் முதல் வெளிர் நீலம் வரையிலான பல்வேறு நிழல்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. அதேபோல், ஸ்போர்ட்டி தோற்றத்தை விரும்பும் ஹேட்ச்பேக் கார் உரிமையாளர்கள் சிவப்பு நிறத்தை அதிகம் விரும்புகின்றனர். மொத்த விற்பனையில் 5 சதவீதத்தை வகிக்கும் சிவப்பு நிறம், சிறிய வகை கார்களில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறது.

குறைந்த வரவேற்பைப் பெற்ற பிற வண்ணங்கள்

பச்சை, ஆரஞ்சு மற்றும் பழுப்பு போன்ற வண்ணங்கள் சந்தையில் தலா 1 சதவீதப் பங்கை மட்டுமே கொண்டுள்ளன. இதில் பச்சை நிறம் ஒட்டுமொத்தமாகப் பிரபலமாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட சில எஸ்யூவி மாடல்களில் ஓரளவு கவனம் ஈர்த்துள்ளது. ஆரஞ்சு நிறம் சில குறிப்பிட்ட பிரிவுகளில் 1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், பழுப்பு மற்றும் அதன் சார்ந்த வண்ணங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

வாடிக்கையாளர்களின் சாய்ஸ்

2025-ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்திய வாடிக்கையாளர்கள் இன்னும் 'பாதுகாப்பான' வண்ணங்களையே அதிகம் நம்புகின்றனர் என்பது தெளிவாகிறது. மறுவிற்பனை மதிப்பு, பராமரிப்பு எளிமை மற்றும் நடைமுறைப் பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும், பிரீமியம் மற்றும் மின்சார வாகனப் பிரிவுகளில் கருப்பு மற்றும் வெள்ளி நிறங்கள் மெதுவாகத் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. மொத்தத்தில், இந்தியச் சாலைகளில் இன்றும் 'வெள்ளை' நிறமே ராஜாவாக வலம் வருகிறது.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget