மேலும் அறிய

Hyundai Exter Facelift: ஹுண்டாயின் பட்ஜெட் SUV..! புதிய எக்ஸ்டருக்கும், பழசுக்கும் என்ன வித்தியாசம் - விலை, அப்க்ரேட்

Hyundai Exter Facelift Vs Old: ஹுண்டாய் சந்தைப்படுத்தியுள்ள ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எக்ஸ்டர் கார் மாடலுக்கும், பழைய எடிஷனுக்கும் இடையேயான வித்தியாசங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Hyundai Exter Facelift Vs Old: ஹுண்டாய் சந்தைப்படுத்தியுள்ள ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எக்ஸ்டர் கார் மாடலின் தொடக்க விலை ரூ.5.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹுண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்டர் கார் மாடலை வெளியிட்டுள்ளது. அறிமுகத்தை கருத்தில் கொண்டு தொடக்க விலை ரூ.5.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புத்துணர்ச்சி பெற்ற மைக்ரோ எஸ்யுவி ஆக ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய மாடலில் 25-க்கும் அதிகமான அப்க்ரேட்கள் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய எடிஷன் அறிமுகத்திலிருந்து, சுமார் 2 லட்சம் பேர் எக்ஸ்டர் யூனிட்கள் விற்பனையாகியுள்ளதாக ஹுண்டாய் தெரிவித்துள்ளது.

புதிய எக்ஸ்டர் Vs பழையது - வெளிப்புற மாற்றம் என்ன?

திருத்தப்பட்ட எக்ஸ்டர் மாடலானது வெளிப்புறத்தில் கவனிக்கத்தக்க ஸ்டைலிங் மாற்றங்களை  பெற்றுள்ளது. மறுவேலை செய்யப்பட்ட முகப்பு பக்கத்தை ஹுண்டாய் வழங்கியுள்ளது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கருப்பு நிற க்ரில், இரண்டு முனைகளிலும் புதிய பம்பர்கள், புதிய டெயில்கேட், சி-பில்லர் டிடெய்லிங், கூடுதலாக வீல் ஆர்க் க்ளாடிங் மற்றும் விங் ஸ்டைல் ரியர் ஸ்பாய்லர் ஆகியவை புதியதாக இடம்பெற்றுள்ளன. மேலும் புதியதாக வடிவமைக்கப்பட்ட 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களையும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எக்ஸ்டர் கார் மாடல் பயன்படுத்துகிறது.

அளவீடுகள் அடிப்படையில் மாற்றமின்றி 3 ஆயிரத்து 830 மில்லி மீட்டர் நீளம், ரூஃப் ரெயில்ஸ் உடன் சேர்த்து ஆயிரத்து 723 மில்லி மீட்டர் அகலம், ஆயிரத்து 643 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 2 ஆயிரத்து 450 மில்லி மீட்டர் வீல் பேஸை கொண்டுள்ளது. சப்-4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் மிகவும் உயரமான கார் மாடல் என்ற பெருமையையும் தக்கவைத்துள்ளது. 


Hyundai Exter Facelift: ஹுண்டாயின் பட்ஜெட் SUV..! புதிய எக்ஸ்டருக்கும், பழசுக்கும் என்ன வித்தியாசம் - விலை, அப்க்ரேட்

புதிய எக்ஸ்டர் Vs பழையது - உட்புற அப்டேட் என்ன?

காரின் கேபினும் புதிய நேவி-க்ரே டூயல் டோன் ஃபினிஷிங் மற்றும் திருத்தப்பட்ட 3டி கார்பன்-எஃபெக்ட் டேஷ்போர்ட் மூலம், கூடுதல் ப்ரீமியமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் மெடல் பெடல்ஸ், D-கட் ஸ்டியரிங் வீல், மேம்படுத்தப்பட்ட இருக்கை உறைகள், ஓட்டுனருக்கு மடிக்கக் கூடிய ஆர்ம்ரெஸ்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பின்புற பயணிகளுக்கான ஹெட்ரெஸ்ட், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி ஆகியவை நிலையானதாக மாற்றப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்களில் தொடர்ந்து 391 லிட்டரும், இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி எடிஷன்கள் 225 லிட்டரும் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளன. 


Hyundai Exter Facelift: ஹுண்டாயின் பட்ஜெட் SUV..! புதிய எக்ஸ்டருக்கும், பழசுக்கும் என்ன வித்தியாசம் - விலை, அப்க்ரேட்

புதிய எக்ஸ்டர் Vs பழையது - புதிய அம்சங்களுமா?

புதிய எக்ஸ்டரில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், மேப்ஸ் மற்றும் ஒன்ஃபோடெயின்மெண்டிற்கு ஓவர் தி ஏர் அப்டேட்ஸ் ஆகியவை அப்படியே தொடர்கின்றன. கூடுதலாக டேஷ்கேம், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி , பின்புறத்தில் டைப் சி சார்ஜிங் போர்ட் மற்றும் 60-க்கும் அதிகமான கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்ட ப்ளூலிங்க் கனெக்டிவிட்டி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த வசதியானது இணைய தொடர்பு இல்லாவிட்டாலும்  செயல்படக்கூடிய 300க்கும் அதிகமான வாய்ஸ் கமேண்ட்களை கொண்டுள்ளதாக ஹுண்டாய் தெரிவித்துள்ளது. 


Hyundai Exter Facelift: ஹுண்டாயின் பட்ஜெட் SUV..! புதிய எக்ஸ்டருக்கும், பழசுக்கும் என்ன வித்தியாசம் - விலை, அப்க்ரேட்

புதிய எக்ஸ்டர் Vs பழையது - பாதுகாப்பிலும் அப்டேட்

எக்ஸ்டரின் பாதுகாப்பு பிரிவும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 45 அம்சங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் 30 அம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையானதாக மாற்றப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்குகள் என்பது நிலையான ஆப்ஷனாக இருக்க, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் செண்ட்ரல் லாக் ஆகியவையும் புதியதாக அனைத்து வேரியண்ட்களிலும் நிலையானதாக மாற்றப்பட்டுள்ளன. டாப் வேரியண்ட்களில் டேஷ்கேம், ரியர் பார்கிங் கேமரா, ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன.

புதிய எக்ஸ்டர் Vs பழையது - பவர்ட்ரெயின் விவரங்கள்

இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி, 1.2 லிட்டர் 4 சிலிண்டர்  கப்பா பெட்ரோல் இன்ஜின் அப்படியே தொடர்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்த செக்மெண்டில் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்ட ஒரே எஸ்யுவி ஆகவும் எக்ஸ்டர் நீடிக்கிறது. பயனர்கள் 1.2 லிட்டர் பை-ஃபியூயல் பெட்ரோல் - சிஎன்ஜி  வெர்ஷனை மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் தேர்வு செய்யலாம். 

புதிய எக்ஸ்டர் Vs பழையது - விலை விவரங்கள்

பல்வேறு அப்க்ரேட்கள் இணைக்கப்பட்டு இருந்தாலும், எக்ஸ்டரின் மீது பெரிய அளவிலான விலையேற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. மேனுவல் எடிஷனில் தொடக்க விலை ரூ.5.79 லட்சமாகவும், ஆட்டோமேடட் மேனுவல் எடிஷனின் ரேஞ்சானது ரூ.9.41 லட்சம் ஆகவும் உள்ளது. சிஎன்ஜி எடிஷன்களின் விலை ரூ.6.99 லட்சத்தில் தொடங்குகிறது. ஹுண்டாய் டீலர்ஷிப் அலுவலகங்களை அணுகி, ரூ.11 ஆயிரம் என்ற கட்டணத்தை செலுத்தி பயனர்கள் புதிய் எடிஷனை முன்பதிவு செய்யலாம். இந்த காரானது 7 ஒற்றை நிற ஆப்ஷன்களிலும், கோல்டன் ப்ரான்ஸ் மற்றும் டைடானியம் ப்ளாக் மேட் எனும் ஒரே ஒரு டூயல் டோன் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.

இன்ஜின்

ட்ரான்ஸ்மிஷன்

வேரியண்ட்

விலை (எக்ஸ்-ஷோரூம்)

1.2L கப்பா பெட்ரோல்

MT

HX 2

ரூ. 5,79,900

1.2L கப்பா பெட்ரோல்

MT

HX 3

ரூ. 6,23,900

1.2L கப்பா பெட்ரோல்

MT

HX 4

ரூ. 7,21,900

1.2L கப்பா பெட்ரோல்

MT

HX 6

ரூ. 7,94,900

1.2L கப்பா பெட்ரோல்

MT

HX 8

ரூ. 8,35,900

1.2L கப்பா பெட்ரோல்

AMT

HX 3

ரூ. 6,90,900

1.2L கப்பா பெட்ரோல்

AMT

HX 4+

ரூ. 8,05,900

1.2L கப்பா பெட்ரோல்

AMT

HX 6

ரூ. 8,54,900

1.2L கப்பா பெட்ரோல்

AMT

HX 8

ரூ. 9,07,900

1.2L கப்பா பெட்ரோல்

AMT

HX 10

ரூ. 9,41,900

1.2L பை-ஃபியூயல்

MT

HX 2

ரூ. 6,99,900

1.2L பை-ஃபியூயல்

MT

HX 3

ரூ. 7,43,900

1.2L பை-ஃபியூயல்

MT

HX 4

ரூ. 8,26,900

1.2L பை-ஃபியூயல்

MT

HX 6

ரூ. 8,93,900

1.2L பை-ஃபியூயல்

MT

HX 8

ரூ. 9,40,900

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
Innova Hycross Facelift: அடி சக்க.! இன்னோவா ஹைக்ராஸை ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் அவதாரத்தில் இறக்கும் டோயோட்டா; சிறப்பம்சம் என்ன.?
அடி சக்க.! இன்னோவா ஹைக்ராஸை ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் அவதாரத்தில் இறக்கும் டோயோட்டா; சிறப்பம்சம் என்ன.?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget