மேலும் அறிய

பழைய காரை EV-ஆக மாற்றுவது எப்படி? அதற்கு எவ்வளவு செலவு ஆகும்? - முழு விவரம் இதோ

பழைய பெட்ரோல் வாகனத்தை எலெக்ட்ரிக் காராக மாற்றும் ரெட்ரோஃபிட்டிங் முறை, ஏற்படும் செலவுகள், RTO அனுமதிகள்மற்றும் அரசு வழங்கும் ஊக்கத்தொகைகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Car Retrofitting: பெட்ரோல், டீசல் விலைகளை தாங்க முடியாத வாகன உரிமையாளர்கள் எப்போதும் மாற்று வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் CNG, LPG பக்கம் சாய்ந்தவர்கள், இப்போது அனைவரின் கவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் புதிய எலெக்ட்ரிக் கார் வாங்குவது அனைவருக்கும் சாத்தியமாக இருக்காது. இப்படிப்பட்ட நேரத்தில் பழைய பெட்ரோல் காரை எலெக்ட்ரிக் காராக மாற்றிக்கொள்ளலாம். இந்த முறையே 'ரெட்ரோஃபிட்டிங்'.

ரெட்ரோஃபிட் என்றால் என்ன?

உற்பத்தி நேரத்தில் வாகனத்தில் இருந்த இன்ஜின் அல்லது எரிபொருள் அமைப்பை அகற்றி. அதன் இடத்தில் புதிய பேட்டரி மற்றும் மோட்டார் தொழில்நுட்பத்தை பொருத்துவதை ரெட்ரோஃபிட்டிங் என்று அழைக்கப்படுகிறது. முன்பு பெட்ரோல் கார்களுக்கு CNG கிட்கள் பொருத்தப்படுவதை பார்த்தோம். இப்போது அதேபோல் எலெக்ட்ரிக் கிட்களை பொருத்திக்கொள்ளும் மாற்று போக்கு நடக்கிறது.

இது யாருக்கு பயனளிக்கும்?

உங்கள் வாகனம் தினமும் குறைந்தது 50 கிலோமீட்டருக்கும் அதிகமாக ஓடினால் மட்டுமே ரெட்ரோஃபிட் செய்வது லாபகரமாக இருக்கும். சாதாரண காரை EV-ஆக மாற்றுவதற்கான ஆரம்ப செலவு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை இருக்கும். அதனால் தனிப்பட்ட கார்களை விட தினமும் ஓடும் கேப்கள், டெலிவரி வாகனங்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.

வாகனத்தை மாற்றுவதற்கு முன் இவற்றைக் கவனிக்க வேண்டும்:

* உங்கள் வாகனம் குறைந்தது ஏழு முதல் எட்டு ஆண்டுகள் பழையதாக இருந்து, நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே EV-ஆக மாற்ற வேண்டும்.

* கார் துருப்பிடிக்காமல் இருக்க வேண்டும். மேலும் 10-15 ஆண்டுகள் சாலையில் ஓடும் திறன் உள்ளதா, இல்லையா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

* கார் ஃப்ரேம், சேசிஸ் வலுவாக உள்ளதா? இல்லையா? என்பதை வொர்க்ஷாப்பில் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

* உங்கள் வாகன மாடலுக்கு ARAI (Automotive Research Association of India) அங்கீகரித்த EV கிட் பொருந்துமா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.

* எதிர்காலத்தில் உங்கள் பழைய வாகன உதிரிபாகங்கள் கிடைக்குமா, இல்லையா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.

மாற்று செயல்முறை எப்படி நடக்கிறது?

* உங்கள் காரை EV-ஆக மாற்ற விரும்பினால் முதலில் RTO அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். RC, லைசென்ஸ் மற்றும் பொருத்தப்படவுள்ள எலெக்ட்ரிக் கிட் விவரங்களை சமர்ப்பித்து முன்அனுமதி பெற வேண்டும்.

* அனுமதி கிடைத்த பிறகு ARAI, CIRT, ACAT அல்லது GARC போன்ற நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ ரெட்ரோஃபிட்டிங் மையங்களில் மட்டுமே கிட் பொருத்திக்கொள்ள வேண்டும். அங்கீகாரம் இல்லாத கிட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.

* கிட் பொருத்தப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனம் வாகனத்தின் செயல்திறன், பிரேக்குகள், எலெக்ட்ரானிக்ஸ் அமைப்புகளைச் சரிபார்த்து இன்வாய்ஸுடன் கூடிய ஃபிட்னஸ் சான்றிதழை வழங்கும்.

இந்த சான்றிதழுடன் வாகனத்தை மீண்டும் RTO அலுவலகத்துக்கு கொண்டு சென்று பரிசோதனையை முடிக்க வேண்டும். அப்போது, அந்த வாகனத்தின் RC-யில் எரிபொருள் வகையை EV-ஆக மாற்றி எண்டார்ஸ்மெண்ட் வழங்கப்படும். அதன் பிறகே காப்பீடும் பொருந்தும்.

டிரைவர்கள் தினமும் மணிக்கணக்கில் வாகனத்தை ஓட்டி, நூற்றுக்கணக்கான முறை கியர்களை மாற்றுகிறார்கள். வாகனத்திலிருந்து வரும் அதிர்வுகள், கியர் மாற்றங்களால் சில வகையான உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். EV-ஆக மாறினால் அதிர்வுகளும், சத்தங்களும் இருக்காது. மாசு குறைவதோடு மட்டுமல்லாமல் உடல்நலமும் நன்றாக இருக்கும். பழைய வாகனத்தை ஒதுக்கி வைக்காமல்  எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றிக்கொள்வது சுற்றுச்சூழலுக்கும், செலவுக்கும் இரண்டிற்கும் நன்மை தரும்.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Vespa Electric Scooter: 3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
Compact SUV: டக்கரான குட்டி கார்கள் தான் டார்கெட்டா..! அப்க்ரேட்களுடன் வரும் 3 எஸ்யுவிக்கள் - விலை, அம்சங்கள், வசதி
டக்கரான குட்டி கார்கள் தான் டார்கெட்டா..! அப்க்ரேட்களுடன் வரும் 3 SUVக்கள் - விலை, அம்சங்கள், வசதி
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
"சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு" - திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர்!
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Embed widget