மேலும் அறிய

Creta Rival: க்ரேட்டா போட்டியாளருக்கு அப்க்ரேட் கொடுக்கும் ஜப்பான் நிறுவனம் - புது அம்சங்கள், வசதிகள் என்ன?

Honda Elevate FaceLift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா மிட்-சைஸ் எஸ்யுவியின் போட்டியாளரான, ஹோண்டா எலிவேட் அடுத்த மாதம் அப்க்ரேட் எடிஷனாக களமிறக்கப்பட உள்ளது.

Honda Elevate FaceLift: ஹோண்டா  நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்யுவி ஆன எலிவேட்டில் இடம்பெற வாய்ப்புள்ள அம்சங்கள், வசதிகள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

க்ரேட்டா போட்டியாளருக்கு அப்க்ரேட்..!

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டுகிறது. அந்த வகையில் சிட்டி கார் மாடலை அண்மையில் அப்க்ரேட் செய்தது. அந்த வரிசையில் ஏற்கனவே அமலில் உள்ள மற்றொரு கார் மாடலையும் மேம்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. புதிய கார் மாடல்களை சந்தைப்படுத்துவதற்கு முன்னதாக, ஏற்கனவே உள்நாட்டு போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து மாடல்களுக்கும் புத்துயிரூட்ட ஹோண்டா திட்டமிட்டு இருப்பதை போன்று தெரிகிறது.  அந்த வரிசையில் நாட்டின் மிகச்சிறந்த மிட்-சைஎஸ் எஸ்யுவி ஆன க்ரேட்டாவிற்கு போட்டியாக, இந்தியாவில் விற்பனையாகி வரும் ஹோண்டா எஸ்யுவியின் அப்க்ரேட் எடிஷன் எப்படி இருக்கும் என்ற விவரங்களை இங்கே அறியலாம்.

ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் - என்ன எதிர்பார்க்கலாம்?

எலிவேட் கார் மாடலானது இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் களமிறக்கப்பட்டது. அதன் பிறகு ஒருமுறை கூட இந்த வாகனம் முறையான மிட்-லைஃப் அப்டேட்களை பெறவில்லை. அந்த பணியை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதைய அப்டேட் அமைய உள்ளது. மிகவும் மாடர்னாகவும், டைனமிக்காகவும் மாற்றும் வகையில் மிட்-சைஸ் எஸ்யுவியின் ஸ்டைலிங்கில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போதைய வெளிப்புற தோற்றமானது க்ரேட்டாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த எஸ்யுவியின் முன் மற்றும் பின் வடிவமைப்பில் கணிசமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அந்த வகையில் பம்பர்கள், எல்இடி விளக்குகள் மற்றும் முன்பக்க க்ரில் ஆகியவை புத்துயிரூட்டப்படலாம். பக்கவாட்டுத் தோற்றத்தில் உள்ள ஒரே பெரிய மாற்றம், புதிய 17 இன்ச் அலாய் வீல்களின் தொகுப்பாக இருக்கலாம்.

ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் - கூடுதல் அம்சங்கள்?

எலிவேட்டின் கேபினானது இந்த காரின் மிகவும் வலுவான அம்சமாகும். இதில் க்ளட்டர் ஃப்ரீ டேஷ்போர்ட், ஆம்பிள் பிஷிகல் பட்டன்கள் மற்றும் சுவிட்ச்கள், வசதியான லெதர்-வ்ரேப்ட் இருக்கைகள் மற்றும் விசாலமான இடவசதி ஆகியவை அடங்கும். எனவே இதில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இதுவரை இல்லாத ப்ரீமியம் அம்சங்களில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அந்த வரிசையில் வென்டிலேடட் முன்புற இருக்கைகள், பவர்ட் கோ-ட்ரைவர் இருக்கைகள், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிம் சன்ரூஃப் மற்றும் ரியர் சன்ப்ளைண்ட்ஸ் ஆகியவை அடங்கும். தற்போது டீலர் தரப்பிலிருந்து மட்டுமே 360 டிகிரி கேமரா வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில், அது நிலையான அம்சமாக மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Kinetic DX+: 132KM ரேஞ்சில் புது மின்சார ஸ்கூட்டர்..! ரிவர்ஸ் அசிஸ்ட், 37 லிட்டர் பூட் ஸ்பேஸ் - கைனெடிக் விவரங்கள்

ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் - ஹைப்ரிட் வருமா?

இன்ஜின் அம்சத்தில் தான் ஹோண்டா நிறுவனம் மிகப்பெரிய அப்டேட் கொடுக்க வாய்ப்புள்ளது. எஸ்யுவியின் தற்போதைய 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் பவர்டிரெயினில் (6 MT மற்றும் CVT உடன் கிடைக்கிறது) எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. அதேநேரம், சிட்டி மாடலில் உள்ள 1.5-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெயினை எலிவேட் மாடலில் வழங்க வாய்ப்புள்ளதாம். இந்திய சந்தையில் ஹைப்ரிட் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால், ஹோண்டா எலிவேட் ஹைப்ரிட்டை அறிமுகப்படுத்த இது ஒரு சரியான நேரமாகும். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை.

ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் - வெளியீடு, விலை

ஹோண்டா நிறுவனம் அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றை திட்டமிட்டுள்ளது. அதில் புதிய எலிவேட் அறிமுகமாகலாம். தற்போது, ​​ஹோண்டா எலிவேட்டின் விலை ரூ. 11.58 லட்சம் முதல் ரூ. 16.93 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) உள்ளது. இது மிகவும் போட்டி நிறைந்த பிரிவு என்பதாலும், இதன் முக்கிய போட்டியாளரான ஹுண்டாய் க்ரேட்டா ஏற்கனவே குறைந்த ஆரம்ப விலையைக் கொண்டிருப்பதாலும், வேரியண்ட்டைப் பொறுத்து சுமார் ரூ. 50,000 வரை புதிய எலிவேட்டின் விலை உயரக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Innova Rival: ரைட்ரா.. இன்னோவாவிற்கு போட்டியாக வரும் புது MPV.. ஜப்பான் ப்ராண்ட் உடன் தெ.கொரியா போட்டி
ரைட்ரா.. இன்னோவாவிற்கு போட்டியாக வரும் புது MPV.. ஜப்பான் ப்ராண்ட் உடன் தெ.கொரியா போட்டி
வரப்போது TVS Norton Atlas Adv பைக்! டக்கரான 7 அம்சங்கள் - என்னென்ன?
வரப்போது TVS Norton Atlas Adv பைக்! டக்கரான 7 அம்சங்கள் - என்னென்ன?
Delimitation: தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
Himalayan 750: மிருகத்தை விற்பனைக்கு கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட்..! இவ்ளோ பெரிய விலைக்கு வொர்த்தா?
மிருகத்தை விற்பனைக்கு கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட்..! இவ்ளோ பெரிய விலைக்கு வொர்த்தா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைப் பாதுகாத்திருக்கிறோம், நாடாளுமன்ற வலிமை நம்மிடம் இல்லை" - ஸ்டாலின் கொடுத்த விளக்கம் என்ன?
Annamalai: ஆதாயம் இல்லாமல் திமுக ஆதரவு கொடுக்கமாட்டாங்க... அடுத்த 6 மாதத்தில் இது எல்லாம் நடக்கும்.. அண்ணாமலை!
Annamalai: ஆதாயம் இல்லாமல் திமுக ஆதரவு கொடுக்கமாட்டாங்க... அடுத்த 6 மாதத்தில் இது எல்லாம் நடக்கும்.. அண்ணாமலை!
திருச்சி visit-க்கு தயாரான முதல்வர்! - இருமுறை திட்டமிட்டு ரத்தான பயணம் பற்றி தெரியுமா?
திருச்சி visit-க்கு தயாரான முதல்வர்! - இருமுறை திட்டமிட்டு ரத்தான பயணம் பற்றி தெரியுமா?
MK Stalin: இது வாழ்வா? சாவா? போராட்டம்! மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை! மு.க.ஸ்டாலின்
MK Stalin: இது வாழ்வா? சாவா? போராட்டம்! மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை! மு.க.ஸ்டாலின்
"இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்" - ஸ்டாலினிடம் ராகுல் காந்தி பேசியது என்ன?
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
Embed widget