மேலும் அறிய

Hero VIDA VX2 Plus: 4.4KWh பேட்டரி, 187KM ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - EMI-க்கு ரூ.2500 போதும், முழு விவரங்கள்

Hero VIDA VX2 Plus 4.4 kWh EMI: ஹீரோ நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ப்ராண்டான விடாவின் VX2 Plus 4.4 kWh எடிஷனை, மலிவு விலையில் சொந்தமாக்குவதற்கான நிதி திட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Hero VIDA VX2 Plus 4.4 kWh EMI: ஹீரோ நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ப்ராண்டான விடாவின் VX2 Plus 4.4 kWh எடிஷன் விலை சென்னையில் சுமார் ரூ.1.50 லட்சமாக (எக்ஸ் - ஷோரூம்) உள்ளது.

ஹீரோ விடா VX2 Plus 4.4 kWh மின்சார ஸ்கூட்டர்:

நகர்ப்பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக, தினசரி அலுவலக பயன்பாடு மற்றும் குறுகிய தூர பயணங்களுக்கு, காரை காட்டிலும் மின்சார இருசக்கர வாகனங்களை பயன்படுத்த பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையிலான ஸ்கூட்டர்களை தேடுபவர்களுக்கான சிறந்த தேர்வாக ஹீரோ நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ப்ராண்டான விடாவின் VX2 Plus 4.4 kWh எடிஷன் இருக்கும். இந்த ஸ்கூட்டரை மலிவு விலையில் சொந்தமாக்குவதற்கான நிதி திட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

விடா VX2 Plus 4.4 kWh மின்சார ஸ்கூட்டர் - ரூ.1.54 லட்சம்

விடாவின் VX2 Plus ஸ்கூட்டரின் 4.4 kWh பேட்டரி எடிஷன் அண்மையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எக்ஸ் - ஷோரூம் விலை சென்னையில் சுமார் ரூ.1.43 லட்சத்தில் தொடங்குகிறது. இதன் ஆன் ரோட் விலை சுமார் ரூ.1.54 லட்சம் வரை நீள்கிறது. Baas எனப்படும் வாடகை மூலம் பேட்டரியை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை தேர்வு செய்தால், வாகனத்தை மேலும் குறைந்த விலையில் சொந்தமாக்க முடியும். ஒருவேளை இந்த ஸ்கூட்டரை ஒரே அடியாக முழு தொகையையும் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம். பல வங்கிகள் இருசக்கர வாகனங்களுக்கு தாராளமாக கடனுதவிகளை வழங்குகின்றன.

விடா VX2 Plus 4.4 kWh ஸ்கூட்டர் - ரூ.2,500 போதும்

பொதுவாகவே வங்கிக் கடன் உதவியுடன் வாகனங்களை வாங்க விரும்புபவர்கள், பெருந்தொகையை முன்பணமாக செலுத்துவிட்டு, கணிசமான தொகையை கடனாக பெறுவதே லாபகரமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் நீண்ட கால கடன்சுமை மற்றும் வட்டி செலவை பெரிய அளவில் குறைக்க முடியும். அதோடு, நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பதன் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடனை பெற முடியும். உதாரணமாக விடா VX2 Plus 4.4 kWh ஸ்கூட்டரின் டாப் வேரியண்டின் விலையான சுமார் ரூ.1.54 லட்சத்தில் 75 ஆயிரம் ரூபாயை டவுன் - பேமண்டாக செலுத்துவதாக கொள்வோம். மீதமுள்ள 79 ஆயிரம் ரூபாயை வங்கி மூலமாக கடனாக அணுகலாம். 3 வருடங்களில் 9.7 சதவிகித வட்டியில் கடனை பெற்றால், 36 மாதங்களுக்கு தலா சுமார் ரூ.2,500-ஐ தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அதன்படி, கூடுதலாக வட்டி மட்டுமே சுமார் ரூ.12 ஆயிரத்தை செலுத்துவீர்கள். ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாயில் இந்த காரை சொந்தமாக்கிக் கொள்வீர்கள்.

இதையும் படியுங்கள்: Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்

ஹீரோ விடா VX2 ப்ளஸ் 4.4KWh - மைலேஜ், ரேஞ்ச்

அம்சங்கள் விடா விஎக்ஸ்2 ப்ளஸ் 4.4KWh வேரியண்ட்
பேட்டரி 4.4KWh
பேட்டரி கான்ஃபிகரேஷன் இரண்டு அகற்றக்கூடிய 2.2KWh பேட்டரிகள்
சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 187கி.மீ.,
நிஜ உலக எதிர்பார்ப்பு ரேஞ்ச் 140கி.மீ.,
அதிகப்படியான மோட்டார் அவுட்புட் 6KW
அதிகப்படியான டார்க் 26Nm
அதிகப்படியான வேகம் மணிக்கு 90கி.மீ.,
0-40KM/h ஆக்சிலரேஷன் 3.1 விநாடிகள்
ரைடிங் மோட்கள் எகோ, ரைட், ஸ்போர்ட்
இருக்கைக்கு கீழே ஸ்டோரேஜ் 27.2 லிட்டர்
வாகனத்தின் மொத்த எடை 120 கிலோ
டிஸ்பிளே 4.3 இன்ச் டிஎஃப்டி
ப்ரேக்கிங் முன்புறம் டிஸ்க், பின்புறம் சிபிஎஸ் உடன் கூடிய ட்ரம்
டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் நேரம் 65 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 80% 

ஹீரோ விடா VX2 ப்ளஸ் - அம்சங்கள், வசதிகள்

இந்த ஸ்கூட்டரில் முழுமையான LED விளக்குகள்,  ஸ்டெப் பை ஸ்டெப் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்ட். ஓவர் தி ஏர் அப்டேட்கள்,  ரிவர்ஸ் மற்றும் பார்க் மோட்கள், ரிஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்,  இருவழி த்ராட்டில் ஃபங்க்சனாலிட்டி,  ஒருங்கிணைந்த ப்ரேக்கிங் சிஸ்டம்,  முன் டிஸ்க் மற்றும் பின் டிரம் பிரேக்குகள், 12 இன்ச் அலாய் வீல்கள்,  இருக்கைக்கு அடியில் 27.2 லிட்டர் சேமிப்பு இடம், 4.8-லிட்டர் முன்புற சேமிப்புப் பகுதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.  மேலும் மேட் க்லாலோ லைம், நெக்சஸ் ப்ளூ, மேட் இன்ஸ்பைர்ட் ஒய்ட், பெர்ல் ரெட், பெர்ல் ப்ளாக், ஆடம் ஆரஞ்சு மற்றும் மெடாலிக் மேட் கன் மெடல் க்ரே ஆகிய 7 வண்ண விருப்பங்களில் ஒன்றை பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வந்துட்டான்.. வந்துட்டான்.. அறிமுகமாகியது புதிய Bajaj Pulsar N160 S & N160 SS! விலை எவ்ளோ?
வந்துட்டான்.. வந்துட்டான்.. அறிமுகமாகியது புதிய Bajaj Pulsar N160 S & N160 SS! விலை எவ்ளோ?
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget