60 கி.மீட்டர் மைலேஜ்.. ஹீரோவின் கிளாமரான Glamour X - விலை எவ்ளோ?
ஹீரோ நிறுவனத்தின் வெற்றிகரமான Glamour X பைக்கான விலை , தரம் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனமாக திகழ்வது ஹீரோ. இவர்களின் வெற்றிகரமான இரு சக்கர வாகனங்களில் மிகவும் வெற்றிகரமான இரு சக்கர வாகனம் Glamour X.
Glamour X:
இந்த பைக்கின் 3 வேரியண்ட் உள்ளது.
1. Glamour X 125 Drum - ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 722
2. Glamour X 125 Disc - ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரத்து 655
3. Glamour X 125 Integrated ABS - ரூபாய் 1 லட்சத்து 21 ஆயிரத்து 155
சிறப்புகள்:
இதில் முதல் வேரியண்ட் ட்ரம் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டாவது வேரியண்ட் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது 3வது வேரியண்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 125.5 கிலோ ஆகும்.127 கிலோ ஆகும்.
இதில் 124.7 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. இருக்கை உயரம் 790 மி.மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் நீலம், வெள்ளை, கருப்பு - வெள்ளை, கருப்பு - நீலம், சாம்பல் ஆகிய வண்ணங்களில் இந்த பைக் உள்ளது.
டாப் ஸ்பீட்:
இந்த பைக்கில் அதிகபட்சமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த பைக் 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த பைக்கில் 1 கியர் கீழேவும், 4 கியர் மேலேவும் உள்ளது. 11.4 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டுள்ளது. எகோ, ரோட் மற்றும் பவர் ரைட் மோட்களில் உள்ளது.
பெட்ரோலில் ஓடும் இந்த பைக்கில் ஐபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 18 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. ரியர் சஸ்பென்சன் ப்ரீலோட் அட்ஜெஸ்டர் வசதி உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீட்டர் வசதி உள்ளது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 1.6 லிட்டர் ரிசர்வ் ப்யூல் கேபாசிட்டி பொருத்தப்பட்டுள்ளது. 70 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது.
எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. ப்ளூடூத் கனெக்ஷன் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது.
டிஸ்டன்ஸ் டூ எம்ப்ட்டி, 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல், டெகோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/ எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், ப்ரேக்/ டெயில் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















