இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறும்? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். கம்பீரத்தின் அடையாளமாக காணப்படும் இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
Royal Enfield Himalayan 750:
இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த பல்வேறு இரு சக்கர வாகனங்களை வரிசையாக வைத்துள்ள ராயல் என்ஃபீல்ட். இவர்கள் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள புதிய பைக் Royal Enfield Himalayan 750.
இந்த பைக்கில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது? என்பதை கீழே காணலாம்.
750 சிசி எஞ்ஜின்:
அட்வெஞ்சர் பைக்கான இந்த Royal Enfield Himalayan 750 பைக்கில் இரட்டை சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பரிசோதனை ஓட்டம் ஆங்காங்கே இந்தியாவில் நடந்து வருகிறது. ஹிமாலயன் 450 பைக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்து இந்த Royal Enfield Himalayan 750 பைக் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் 750 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ட்வின் ஃப்ரன்ட் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பைக்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது இதன் ப்ரேக்கிங் சிஸ்டம் ஆகும்.
சக்கரங்கள்:
ஹிமாலயன் 450 பைக்கில் இருந்ததைக் காட்டிலும் ப்ரேக்கிங் வசதி மிகப்பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் 19 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹிமாலயன் 450 பைக்கில் முன்பக்கம் 21 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்த புதிய Royal Enfield Himalayan 750 பைக்கில் 19 இன்ச் சக்கரம் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது கரடுமுரடான பகுதிகளில் வாகனத்தை கையாள்வது இன்னும் எளிதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
விலை என்ன?
இந்த புதிய Royal Enfield Himalayan 750 பைக்கில் வயர் ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 55 முதல் 60 எச்பி குதிரை ஆற்றல் இருக்கும் என்று கருதப்படுகிறது. 60 முதல் 65 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 6 கியர் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதி உள்ளது.
டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி உள்ளது. நேவிகேஷன் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், த்ரோட்டில் டெக்னாலஜி வசதி உள்ளது. ரைடிங் மோட் உள்ளது. இந்த பைக் இன்னும் சில மாதங்களில் உலக சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை ரூபாய் 4 லட்சம் முதல் ரூபாய் 4.50 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















