ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. இந்த மாசம் அறிமுகமாகிறது Sprinto E Scooter! வெயிட்டிங் மாமே!
ஸ்ப்ரின்டோ நிறுவனம் இந்தியாவில் விரைவில் தங்களது புதிய இ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
புதிய இ ஸ்கூட்டர்:
இந்தியாவில் ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்த ஆர்வம் காட்டி வரும் நிலையில், டிவிஎஸ், பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்களும் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த வரிசையில் ஸ்ப்ரின்டோ நிறுவனமும் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் கால்தடம் பதிக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஸ்ப்ரின்டோ நிறுவனம் இந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் புதிய இ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.
130 கி.மீட்டர் மைலேஜ்:
e-SPRINTO என்ற இந்த புதிய இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இதன் பேட்டரி ஆற்றல், வேரியண்ட்கள், பேட்டரி வகை போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இந்த தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமானால் இந்திய சந்தையில் e-SPRINTO மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று கருதப்படுகிறது. வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கும், வீட்டு பயன்பாட்டிற்கும் இந்த புதிய e-SPRINTO இ ஸ்கூட்டர் மிகப்பெரிய அளவில் உகந்ததாக இருக்கும் என்று ஸ்ப்ரின்டோ நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.
வசதிகள்:
இதுவரை ஸ்ப்ரின்டோ நிறுவனத்தின் e-Sprinto Roamy, e-Sprinto Rapo, e-Sprinto LS, Sprinto HS மற்றும் Amery இந்தியாவில் இ ஸ்கூட்டராக விற்பனை செய்து வருகிறது. ஸ்ப்ரின்டோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய இ ஸ்கூட்டர் அவர்களது படைப்புகளில் அதிக மைலேஜ் தரும் இ ஸ்கூட்டராக கருதப்படுகிறது. Amery இ ஸ்கூட்டர் தற்போது 140 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ப்ரின்டோ நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டரின் விலை தற்போது வரை வெளியாகவில்லை. இதன் விலை ரூபாய் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்




















