மேலும் அறிய

Royal Enfield Himalayan: கம்பேக் தரும் க்ளாசிக் ஹிமாலயன்? சக்தி வாய்ந்த இன்ஜினுடன் புது பைக் எப்போது அறிமுகம்?

Royal Enfield Himalayan: ரயால் என்ஃபீல்ட் நிறுவனம் தனது க்ளாசிக் ஹிமாலயன் மோட்டார் சைக்கிள் மாடலை மீண்டும் சந்தைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Royal Enfield Himalayan: ரயால் என்ஃபீல்ட் நிறுவனம் தனது க்ளாசிக் ஹிமாலயன் மோட்டார் சைக்கிள், நடப்பாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாம்.

க்ளாசிக் ஹிமாலயன் கம்பேக்கா?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, ராயல் என்ஃபீல்டின் க்ளாசிக் ஹிமாலயன் மோட்டார் சைக்கிள் மாடலானது, ஸ்க்ராம் 440 மாடலில் உள்ள அதிக சக்தி வாய்ந்த 440சிசி இன்ஜினுடன் மீண்டும் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம். இந்த தகவல் ஒருவேளை உண்மையாக இருந்தால், கரடுமுரடான மற்றும் தீவிரமான தோற்றத்தை கொண்ட உண்மையான ஹிமாலயன் 411 மாடலை விரும்புவோருக்கு, புதிய மாடல் பெரும் வரப்பிரசாதமாக அமையக்கூடும். 

D4G எனும் கோட்நேமில் உருவாகி வரும் புதிய மாடலானது 440சிசி இன்ஜினை கொண்டு, உண்மையான க்ளாசிக் ஹிமாலயன் மாடலுக்கான நேரடி போட்டியாளராக சந்தையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பழைய மாடலானது இந்திய சந்தையில் மிட்-சைஸ் அட்வென்சர் மாடல் மோட்டார்சைக்கிளை பரப்புவதில் மிக முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. கூடுதல் உயரம், அதிக எடை மற்றும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் பழைய எடிஷன் விற்பனையில் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

க்ளாசிக் ஹிமாலயன் - மாற்றமு, எதிர்பார்ப்புகளும்..

புதிய ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 மாடலானது மிகவும் செம்மையானதாகவும், ஓட்டுனரை மையகாகவும் கொண்டதாக இருக்கிறது. அதேநேரம், ஒரிஜினல் க்ளாசிக் ஹிமாலயன் மாடலானது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சாலையில் கம்பீரமான தோற்றம் காரணமாக ஏராளமான வாடிக்கையாளர்களை கட்டி இழுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த விஷயத்தில் வெற்றிடம் இருப்பதை உணர்ந்தே, மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன், பழைய பாரம்பரிய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வர ராயல் என்ஃபீல்ட் திட்டமிட்டுள்ளதாம்.

புதிய ஹிமாலயன் மோட்டார் சைக்கிளானது, ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 440 மாடலிலிருந்து பல அம்சங்களை அப்படியே பின் தொடருமென கூறப்படுகிறது. அந்த பட்டியலில் எல்இடி முகப்பு விளக்குகள், டூயல் சேனல் ஸ்விட்சபள் ABS, டூயல் பர்பஸ் டயர்ஸ், USB  சார்ஜிங், கூகுள் மூலம் வழிநடத்தப்படும் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை அடங்க வாய்ப்புள்ளது.


Royal Enfield Himalayan: கம்பேக் தரும் க்ளாசிக் ஹிமாலயன்? சக்தி வாய்ந்த இன்ஜினுடன் புது பைக் எப்போது அறிமுகம்?

க்ளாசிக் ஹிமாலயன் - இன்ஜின் விவரங்கள்

ஸ்க்ராம் 440 மாடலில் உள்ள 25.4bhp மற்றும் 34Nm ஆற்றலை உற்பத்த்தி செய்யக்கூடிய அதே 443சிசி ஏர்/கூல்ட் இன்ஜின் அப்படியே தொடர உள்ளதாம். இதில் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இணைக்கப்படும். இந்த இன்ஜின் ஆனது க்ளாசிக் ஹிமாலயன் மாடலை காட்டிலும் கூடுதல் ஆற்றல் மற்றும் இழுவைத்திறனை உற்பத்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறந்த பயண அனுபவத்தை புதிய வாகனம் வழங்கும் என கூறப்படுகிறது.

ஹார்ட்வேர் அடிப்படையில், ஹால்ஃப் டூப்ளெக்ஸ் ஸ்ப்ளிட் க்ராட்ல் ஃப்ரேம், நீண்ட சஸ்பென்ஷன் ட்ராவலுடன் கூடிய 41மில்லி மீட்டர் டெலெஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்ஸ் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ், கூடுதல் சக்தி வாய்ந்த டிஸ்க் ப்ரேக்குகள் ஆகிய அம்சங்களும் புதிய ஹிமாலயனில் இடம்பெற வாய்ப்புள்ளதாம். 


Royal Enfield Himalayan: கம்பேக் தரும் க்ளாசிக் ஹிமாலயன்? சக்தி வாய்ந்த இன்ஜினுடன் புது பைக் எப்போது அறிமுகம்?

க்ளாசிக் ஹிமாலயன் - விலை, வெளியீடு

இந்திய ரெட்ரோ மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் நீண்டகாலமாகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் க்ளாசிக் ஹிமாலயன் எடிஷனை மீண்டும் கொண்டு வருவது, ப்ராண்டின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே 350சிசி, 440சிசி, 450சிசி மற்றும் 650சிசி உள்ளிட்ட பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களில் பலதரப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வழங்கி வருகிறது. ஹிமாலயன் 440 எடிஷனின் விலை சுமார் ரூ.2.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. நடப்பாண்டு இறுதியிலேயே சந்தைப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் புதிய மோட்டார்சைக்கிளானது, உறுதியான அதே சமயம் எளிதில் அணுகக்கூடிய ஒரு அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள் பிரியர்களுக்கான வாய்ப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

முன்னதாக பழைய க்ளாசிக் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் மோட்டார் சைக்கிளானது 2016ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget