கிரெட்டா, ஹாரியர் EV-க்கு புதிய எலெக்ட்ரிக் போட்டி! பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Chery iCAUR கார்!
இந்த கார் இந்திய சாலைகளில் ஃபிளாட்பெட் ட்ரக்கில் கொண்டு செல்லப்படும்போது படம் பிடிக்கப்பட்டுள்ளதால், இதன் இந்திய அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய எலெக்ட்ரிக் எஸ்யூவி சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் டாடா ஹாரியர் இவி ஆகியவை தங்களின் சிறப்பான ரேஞ்ச் மற்றும் வடிவமைப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்த இரு கார்களுக்கும் சவால் விடும் வகையில், சீனாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான செரி தனது புதிய 5 சீட்டர் எலக்ட்ரிக் எஸ்யூவியான iCAUR 03 காரை களமிறக்கவுள்ளது. சமீபத்தில் இந்த கார் இந்திய சாலைகளில் ஃபிளாட்பெட் ட்ரக்கில் கொண்டு செல்லப்படும்போது படம் பிடிக்கப்பட்டுள்ளதால், இதன் இந்திய அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வடிவமைப்பு
வழக்கமான ஏரோடைனமிக் வடிவமைப்புக்கு பதிலாக, கரடுமுரடான ஆஃப்-ரோடு வாகனத் தோற்றத்துடன், மஸ்குலரான பாக்ஸி டிசைனை இது கொண்டுள்ளது. சுமார் 4.4 மீட்டர் நீளமுள்ள இந்த எஸ்யூவி, எந்த வகையான பாதைகளிலும் எளிதாக பயணிக்கும் வகையிலான சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் தண்ணீரை கிழித்துச் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. மூடிய முன்பக்க கிரில், முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், மஸ்குலரான பின்பக்க பம்பர், பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் இதன் தோற்றத்தை மெருகேற்றுகின்றன. இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் இதற்கான டிசைன் காப்புரிமையை பதிவு செய்துள்ளது.
ரேஞ்ச் மற்றும் செயல்திறன்
சர்வதேச சந்தைகளில் உள்ள இந்த மாடலில் 69.8kWh LFP பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது NEDC அளவீட்டின்படி, முழு சார்ஜில் 418 கிலோமீட்டர் சிறப்பான ரேஞ்சை வழங்குகிறது. இதன் டூயல்-மோட்டார் ஆல்-வீல் டிரைவ் தொழில்நுட்பம், 275 hp பவரையும் 385 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள 80 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம், பேட்டரியை மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.
சிறப்பம்சங்கள்
இதன் கேபினில் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 9.2-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே உள்ளது. முன்பக்க மற்றும் பின்பக்க வென்டிலேட்டட் சீட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், 12-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை உள்ளன. பாதுகாப்புக்காக லெவல்-2 ADAS மற்றும் இன்பில்ட் டேஷ்கேமாகச் செயல்படும் 540 டிகிரி வியூவுடன் கூடிய 360 டிகிரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் போட்டி
JSW மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சரியான பட்ஜெட் விலையில் செரி நிறுவனம் iCAUR 03 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தினால், அது க்ரெட்டா மற்றும் ஹாரியர் EV கார்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமையும். பிரீமியம் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில், பட்ஜெட் விலையில் சக்திவாய்ந்த அம்சங்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























