மேலும் அறிய

வெறும் ரூ.10 ஆயிரம் போதும்... தினசரி ரூ.140- TVS Apache RTR 160 பைக்கை ஓட்டிட்டு போங்க! மைலேஜ், விலை விவரம்

டிவிஎஸ் நிறுவனத்தின் சிறப்பான பைக்குகளில் ஒன்றான அப்பாச்சி RTR 160 (TVS Apache RTR 160) மாடலை சுலபமான முறையில் வாங்கும் விவரங்களை இங்கே காணலாம்.

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அத்தகைய பைக்குகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அந்த வகையில், டிவிஎஸ் நிறுவனத்தின் சிறப்பான பைக்குகளில் ஒன்றான அப்பாச்சி RTR 160 (TVS Apache RTR 160) மாடலை சுலபமான முறையில் வாங்கும் விவரங்களை இங்கே காணலாம்.

விலை மற்றும் இஎம்ஐ விவரங்கள்

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பேஸ் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.1.13 லட்சமாக உள்ளது. ஆர்டிஓ மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட கட்டணங்களைச் சேர்த்தால் இதன் ஆன் ரோடு விலை ₹1.32 முதல் ₹1.35 லட்சம் வரை வரும். இந்த பைக்கை வெறும் ₹9,999 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மீதமுள்ள தொகையை வங்கிக் கடனாகப் பெறலாம்.

என்ன வங்கிக்கு என்ன கடன்?

3 ஆண்டு கால கடனுக்கு, 9.5% முதல் 10% வரை வட்டி விகிதம் கணக்கிடப்பட்டால், உங்களின் மாதாந்திர இஎம்ஐ சுமார் ₹4,000 முதல் ₹4,300 வரை வரும். அதாவது, தினமும் ₹130 முதல் ₹140 வரை சேமித்தாலே இந்த பைக்கை வாங்கிவிடலாம். எனினும், உங்களின் ஊர் மற்றும் சிபில் ஸ்கோரைப் பொறுத்து ஆன் ரோடு விலை மற்றும் இஎம்ஐ மாறும்.

இன்ஜின், வடிவமைப்பு

சிறப்பான தோற்றத்தைக் கொண்ட இந்த பைக்கில், 159.7 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 16.04 PS பவரையும், 13.85 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதி கொண்ட இதில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. இவை நகர டிராஃபிக் மற்றும் மழை நேரங்களில் பைக்கை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுகின்றன.

தொழில்நுட்பம், பாதுகாப்பம்சங்கள்

இதில் முழுமையான டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் உள்ளது. டாப் வேரியண்ட்டை தேர்வு செய்தால், ஸ்மார்ட்போனை பைக்கோடு இணைக்கும் SmartXonnect ப்ளூடூத் வசதி கிடைக்கும். இதன் மூலம் நேவிகேஷன், கால்/ எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் ரேஸ் டெலிமெட்ரி ஆகியவற்றை பெறலாம். இரவு நேரப் பயணத்திற்கு எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் உள்ளன. பாதுகாப்பிற்காக இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மைலேஜ் எப்படி?

160 சிசி பைக்காக இருந்தாலும், இது லிட்டருக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வரை சிறப்பான மைலேஜ் தருவதாக நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி உள்ளதால் நீண்ட தூர பயணங்களுக்கும் இது ஏற்றது. தினசரி அலுவலகப் பயன்பாடு மற்றும் வார இறுதிப் பயணங்களுக்கு பட்ஜெட்டிற்குள் பைக் வாங்க நினைப்போருக்கு இந்த ரூ.9,999 முன்பணத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Embed widget