மேலும் அறிய

Affordable E Scooters: ரூ.1 லட்சம்தான் பட்ஜெட்.. OLA Gig முதல் VIDA VX2 வரை தரமான இ ஸ்கூட்டர்கள்!

ரூபாய் 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள தரமான இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் பிரதான தேர்வாக இ ஸ்கூட்டர்கள் மாறி வருகிறது. மின்சார பேட்டரி, நெருக்கடியான நகர்ப்புறங்களில் எளிதாக சென்று வருவது, சுற்றுச்சூழல் மாசு இல்லாதது போன்ற பல காரணங்களால் இதை பலரும் தேர்வு செய்கின்றனர். 

இந்த சூழலில், ரூபாய் 1 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் உள்ள தரமான இவி ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. OLA Gig:

இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள ஓலா நிறுவனம். அவர்களின் மிக குறைந்த விலையில் உள்ள இ ஸ்கூட்டர் OLA Gig ஆகும். இதன் விலை ரூபாய் 33 ஆயிரத்து 906 ஆகும். இந்த இ ஸ்கூட்டர் முதியவர்கள், நடுத்தர வயதினர் வீட்டின் அருகே சென்று வர ஏதுவான இ ஸ்கூட்டர். 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 0.25 கிலோவாட் பேட்டரி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தாலே 112 கிலோ மீட்டர் வரை செல்லும். 

2. OLA Gig+:

ஓலா கிக் இ ஸ்கூட்டரின் அப்டேட் வெர்சன் இந்த OLA Gig+ ஆகும். இதன் விலை ரூபாய் 45 ஆயிரத்து 579 ஆகும். மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 157 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 1.5 கிலோவாட் பேட்டரி கொண்டது. ட்ரம் ப்ரேக் கொண்டது. 

3. OLA S1 Z:

ஓலா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பாக இருப்பது இந்த OLA S1 Z ஆகும். இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 55 ஆயிரத்து 752 ஆகும்.  இது S1 Z Standard மற்றும் S1 Z Plus வேரியண்ட் என 2 வேரியண்ட் கொண்டது. S1 Z Plus ரூபாய் 60 ஆயிரத்து 838 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 146 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 3 கிலோவாட் பேட்டரியை கொண்டது. ப்ளூடூத் வசதியும் கொண்டது.

4. PURE EV ETrance Neo:

இந்த PURE EV ETrance Neo இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 80 ஆயிரத்து 206 ஆகும். இது ETrance Neo SX, 
ETrance Neo Standard மற்றும் ETrance Neo Plus என மொத்தம் 3 வேரியண்ட்களை கொண்டது. ETrance Neo SX ரூபாய் 80 ஆயிரத்து 206 எனவும், ETrance Neo Standard ரூபாய் 93 ஆயிரத்து 468 எனவும், ETrance Neo Plus ரூபாய் 1 லட்சத்து 3 ஆயிரத்து 670 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ETrance Neo SX 101 கிலோ மீட்டர் மைலேஜும், ETrance Neo Standard 120 கிலோ மீட்டர் மைலேஜும், ETrance Neo Plus ரூபாய் 150 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 1.8 கிலோவாட் பேட்டரி, 2.5 கிலோவாட், 3 கிலோவாட் பேட்டரிகளை கொண்டது.

5. PURE EV EPluto 7G:

இந்த PURE EV EPluto 7G இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 84 ஆயிரத்து 287 ஆகும். இது EPluto 7G CX, EPluto 7G Standard,  EPluto 7G Pro, EPluto 7G Max என 4 வேரியண்ட்களை கொண்டது. இதனா டாப் வேரியண்ட்EPluto 7G Max ரூ.1.22 லட்சம் ஆகும். 1.8 கிலோவாட், 2.5 கிலோவாட், 3 கிலோவாட் மற்றும் 3.5 கிலோவாட் பேட்டரியை கொண்டது இந்த இ ஸ்கூட்டர். 101 கிலோ மீட்டர், 120 கிலோ மீட்டர், 150 கிலோ மீட்டர் என 4 வேரியண்ட்களும் அதன் பேட்டரி தரத்திற்கு ஏற்ப மைலேஜ் தருகிறது. 

6. VIDA VX2:

ஹீரோ நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்தான் இந்த VIDA VX2. இதன் விலை ரூபாய் 92 ஆயிரத்து 532 ஆகும். VX2 Go, VX2 Go மற்றும் VX2 Plus ஆகிய 3 வேரியண்ட்கள் உள்ளது. 2.2 கிலோவாட், 3.4 கிலோவாட் பேட்டரிகளைக கொண்டது. VX2 Go 92 கிலோ மீட்டர் மைலேஜும், VX2 Go ரூபாய் 100 கிலோ மீட்டர் மைலேஜும், VX2 Plus 142 கிலோ மீட்டர் மைலேஜும் தரும் ஆற்றல் கொண்டது. 

தலைப்பு செய்திகள்

காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!
காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget