மேலும் அறிய

Toyota Highlander EV: அடிபொலி..! முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி, 515KM ரேஞ்ச் - டொயோட்டா ஹைலேண்டர் - எப்படி இருக்கு?

Toyota Highlander EV 7 Seater: டொயோட்டா நிறுவனத்தின் அமெரிக்க சந்தைக்கான முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி ஹைலேண்டர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Toyota Highlander EV 7 Seater: டொயோட்டா நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி ஆன ஹைலேண்டர், 515 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஹைலேண்டர் மின்சார எஸ்யுவி:

டொயோட்டா நிறுவனம் தனது முழுமையான மின்சார மாடலான 2027 ஹைலேண்டர் காரை, அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ப்ராண்டின் மின்சார கார் பிரிவை நோக்கிய மாற்றத்திற்கான முக்கிய மாடலாக கருதப்படுகிறது. மேலும் அமெரிக்க சந்தைக்கான டொயோட்டாவின் முதல் 3 வரிசை இருக்கை மின்சார கார் மாடலும் இதுவே ஆகும். உள்ளூரிலேயே அதாவது கெண்டகியில் உள்ள ஆலையில் இந்த கார் செம்பிள் செய்யப்பட உள்ளது. வடக்கு கரோலினாவில் சொந்த பேட்டரி ஆலை மற்றும் விநியோக கூட்டாளிகளிடமிருந்து பேட்டரி மாடல்கள் பயன்படுத்தப்பட உள்ளனவாம். 2026ம் ஆண்டின் இறுதியில் விற்பனை தொடங்க உள்ள நிலையில், அப்போது விலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஹைலேண்டர் - வெளிப்புற டிசைன்

தற்போது விற்பனையில் உள்ள ஹைலேண்டருடன் ஒப்பிடுகையில், புதிய எடிஷனானது சுத்தமான மற்றும் கூடுதல் ஏரோடைனமிக் தோற்றத்தை கொண்டுள்ளது. அதன்படி, பெரிய வளைவுகள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள், முழு அகலத்திற்குமான எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் ஆகியவற்ரை கொண்டுள்ளது. 19 இன்ச் அலாய் வீல்களை ஸ்டேண்டர்டாக கொண்டுள்ளது. மூன்று வரிசை இருக்கை அமைப்பிற்கு ஏற்ப, ஒட்டுமொத்த தோற்றமும் கம்பீரமாக உள்ளது. பெரிய எஸ்யுவிக்கான தோற்றத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டு, மிருதுவான மேற்பரப்பு மற்றும் அதிகப்படியான வளைவு நெளிவுகளை குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளனர். நடைமுறைக்கு உகந்ததாகவும், பேட்டரி ரேஞ்சை கருத்தில் கொண்டு  அதிக செயல்திறன்கொண்ட ஏரோடைனமிக் அம்சத்துடனும் புதிய ஹைலேண்டரை வடிவமைத்துள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. 

Toyota Highlander EV: அடிபொலி..! முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி, 515KM ரேஞ்ச் - டொயோட்டா ஹைலேண்டர் - எப்படி இருக்கு?

டொயோட்டா ஹைலேண்டர் - உட்புற அம்சங்கள், வசதிகள்

கூடுதல் டெக் அடிப்படையிலான லே-அவுட்டை கொண்டு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேபினை ஹைலேண்டர் கொண்டுள்ளது. அதன்படி, 14 இன்ச் சென்ட்ரல் டச்ஸ்க்ரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே ஆகியவை ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகின்றன. மேலும் இந்த எஸ்யுவியில் டொயோட்டாவின் புதிய மல்டி மீடியா சிஸ்டம் மற்றும் சேஃப்டி சென்ஸ் 4.0 ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங்  மற்றும் ப்ரி-கொலிசன் வார்னிங் போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இணைந்துள்ளன.

கான்ஃபிகரேஷன் அடிப்படிடையில், 7 பேர் வரை அமரும் வகையிலான இடவசதியை பெறுகிறது. ஹீடட் முன்புற இருக்கைகளானது நிலையான அம்சமாக உள்ளது. மேலும் கேபினில் டேஷ்போர்ட் மற்றும் டோர்களில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனோடு, சுயவிருப்பத்தின் பேரில் ஆம்பியண்ட் லைட்டிங் இணைக்கும் வசதியும் உள்ளது. டாப் வேரியண்ட்களில் வெண்டிலேடட் முன்புற இருக்கைகள் மற்றும் ஹீடட் இரண்டாவது வரிசை இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. தரைமட்டத்திற்கு மடிக்கக் கூடிய 3வது வரிசை இருக்கைகள் மூலம், லக்கேஜ்களுக்கான இடம் அதிகரிக்கிறது. நிலையான க்ளாஸ் பனோரமிக் ரூஃபும் வழங்கப்படுகிறது. 

Toyota Highlander EV: அடிபொலி..! முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி, 515KM ரேஞ்ச் - டொயோட்டா ஹைலேண்டர் - எப்படி இருக்கு?

டொயோட்டா ஹைலேண்டர் - பேட்டரி, ரேஞ்ச்

ஹைலேண்டர் கார் மாடலானது 77.0kWh மற்றும் 95.8kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிகபட்சமாக 515 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் என டொயோட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷன் கொண்ட வேரியண்ட்கள் 224hp மற்றும் 268Nm ஆற்றலையும்,  ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன் கொண்ட வேரியண்ட்கள் 343hp and 438Nm ஆற்றலையும் உற்பத்தி செய்கிறது. ஆல் வீல் ட்ரைவ் வேரியண்ட்கள் கூடுதலாக மல்டி டெரைன் செலக்ட் மற்றும் க்ராவ்ல் கன்ட்ரோல் வசதிகளையும் கொண்டுள்ளது. 

Toyota Highlander EV: அடிபொலி..! முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி, 515KM ரேஞ்ச் - டொயோட்டா ஹைலேண்டர் - எப்படி இருக்கு?

டொயோட்டா ஹைலேண்டர் EV - இந்தியாவிற்கு வருமா?

வளர்ந்து மற்றும் விரிவடைந்து வரும் சந்தையை கருத்தில் கொண்ட, புதிய ஹைலேண்டர் மின்சார எஸ்யுவி இந்தியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். அப்படி நடந்தால் முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக விற்பனை செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளது. இதனால் விலையானது சுமார் ரூ.70 லட்சத்தில் தொடங்கி ரூ.1 கோடி வரை நிர்ணயிக்கப்படலாம். உள்நாட்டு சந்தையில் ஹைலேண்டரானது கியா EV9 கார் மாடலுடன் போட்டியிடும்.

Frequently Asked Questions

டொயோட்டா ஹைலேண்டர் EV 7 சீட்டர் மாடல் குறித்த சில தகவல்களைக் கூறுங்கள்.

டொயோட்டா நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி இது. இது 515 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஹைலேண்டர் EV-யின் வெளிப்புற வடிவமைப்பு எப்படி இருக்கும்?

புதிய எடிஷனானது சுத்தமான மற்றும் கூடுதல் ஏரோடைனமிக் தோற்றத்தைக் கொண்டுள்ளது. பெரிய வளைவுகள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள், முழு அகலத்திற்குமான எல்இடி விளக்குகள், மற்றும் 19 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.

டொயோட்டா ஹைலேண்டர் EV-யில் என்னென்ன உட்புற அம்சங்கள் மற்றும் வசதிகள் உள்ளன?

14 இன்ச் சென்ட்ரல் டச்ஸ்க்ரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, புதிய மல்டி மீடியா சிஸ்டம், மற்றும் மேம்படுத்தப்பட்ட சேஃப்டி சென்ஸ் 4.0 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. 7 பேர் வரை அமரலாம்.

டொயோட்டா ஹைலேண்டர் EV-யின் பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் என்ன?

இது 77.0kWh மற்றும் 95.8kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிகபட்சமாக 515 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ஹைலேண்டர் EV இந்திய சந்தைக்கு வருமா?

இந்திய சந்தையில் இந்த கார் வர அதிக வாய்ப்புள்ளது. நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது அறிமுகப்படுத்தப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget