மேலும் அறிய

Royal Enfield Hunter 350: கம்மி விலையில் ஹண்டர் 350 பைக்கின் ப்ரீமியம் வேரியண்ட் வந்தாச்சு - அலாய் வீல், புது கலர், வேற?

Royal Enfield Hunter 350: ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளின் புதிய பேஸ் ப்ரீமியம் வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Royal Enfield Hunter 350: ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளின் புதிய வேரியண்டில் இரண்டு வண்ண விருப்பங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் புதிய வேரியண்டில் ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அப்டேட்டானது இதுவரை இல்லாத பேஸ் ப்ரீமியம் வேரியண்டை,  டாப் எண்டில் இரண்டு புதிய வண்ண விருப்பங்களில் கொண்டு வந்துள்ளது. இந்திய சந்தையில் இந்த மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு மற்றும் விநியோகம் தொடங்கியுள்ளது. புதிய பேஸ் ப்ரீமியம் ட்ரிம்மானது டார்மக் ப்ளாக்கில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய இணைப்பாக கருதப்படுகிறது. சென்னையில் இதன் எக்ஸ் - ஷோரூம் விலை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ட்ரி லெவல் வெர்ஷனுக்கு அடுத்தபடியாக புதிய ட்ரிம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹண்டர் 350 - புதிய அப்டேட்கள் என்ன?

அதிகப்படியான விலை என்ற பிரிவில் கால் பதிக்காமலேயே ஹண்டரின் புதிய வேரியண்டில் பல அப்க்ரேட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்கனவே இருந்த ஸ்போக் வீல்களானது அலாய் வீல்கள் மூலம் மாற்றப்பட்டு, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக இந்த நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த ஸ்டைலிங்கின் ஒரு அங்கமாக மேம்படுத்தப்பட்ட, வட்டவடிவிலான ஹாலோஜென் முகப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ரைடர் இண்டர்ஃபேஸ் ஆனது டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் ரோடரி ஸ்விட்ச்கியர் ஆகியவற்றின் மூலம் சிறப்பாக மாற்றப்பட்டுள்ளது. கூடுதலாக தைக்கப்பட்ட இருக்கை, ஸ்போர்ட்டி க்ராப் ரெயில் ஆகியவற்றோடு, பாதுகாப்பு மற்றும் பயண திறன் ஆனது சிங்கிள் சேனல் ABS, ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் ஆகியவற்றால் கையாளப்படுகிறது.


Royal Enfield Hunter 350: கம்மி விலையில் ஹண்டர் 350 பைக்கின் ப்ரீமியம் வேரியண்ட் வந்தாச்சு - அலாய் வீல், புது கலர், வேற?

ஹண்டர் 350 - இன்ஜின் விவரங்கள்

இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி 349சிசி J-ப்ளாட்ஃபார்ம் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேஸ் ப்ரீமீயம் வேரியண்டானது, எளிய அணுகக்கூடிய விலையிலேயே  அலாய் வீல்கள் போன்ற உயர்தர அம்சங்களை கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.


Royal Enfield Hunter 350: கம்மி விலையில் ஹண்டர் 350 பைக்கின் ப்ரீமியம் வேரியண்ட் வந்தாச்சு - அலாய் வீல், புது கலர், வேற?

ஹண்டர் 350 - மற்ற வேரியண்ட் விவரங்கள்

புதிய வேரியண்ட் மட்டுமின்றி, ஹண்டர் 350 மாடலின் டாப் வேரியண்ட்களுக்கு புதிய வண்ண விருப்பங்களையும் ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பை எல்லோ மற்றும் மூன்ஷாட் ஒய்ட் ஆகிய இரண்டுமே, ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 804 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது. மும்பை எல்லோ வண்ணமானது ஃபாஸ்ட் பேஸ்ட்  மற்றும் நகர வாழ்க்கையின் வேகமான இயல்பை வெளிப்படுத்தும் விதமான ஆற்றல் மிகுந்த தாக்கத்தை கொண்டுள்ளது. அதற்கு நேர் எதிராக மூன் ஒய்ட்டானது கலைநயத்துடன் வழங்கப்பட்டுள்ளது. செலெஸ்டியல் தீம்ஸ் மற்றும் ஸ்டோரி டெல்லிங் எலிமெண்ட்களின் தாக்கத்தை கொண்டு, ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளானது லேயர்ட் டிசைன் அப்ரோச்சை கொண்டுள்ளது.  உள்ளூர் சந்தையில் இந்த மோட்டார் சைக்கிளானது, டிவிஎஸ் ரோனின், ட்ரையம்ப் ஸ்பீட் T4, ஹோண்டா CB350RS ஆகிய மாடல்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget