மேலும் அறிய

Hyundai Verna: வெர்னா கம்பேக் வருமா? ஃபேஸ்லிஃப்டில் அசத்தும் ஹுண்டாய் - புதிய எடிஷனில் மாற்றங்கள் என்ன?

Hyundai Verna Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள, வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ள அப்க்ரேட்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hyundai Verna Facelift: ஹுண்டாய் அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள, வெர்னா ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் அப்க்ரேட்கள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹுண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அண்மையில் தான், வென்யுவின் அப்க்ரேட் செய்யப்பட்ட எடிஷனை ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, வெர்னாவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை தயார்படுத்தி வருகிறது. நிறுவனம் தரப்பில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஆக்சென்ட் கார் மாடலுக்கு மாற்றாக 2006ம் ஆண்டு அறிமுகமான வெர்னா, செடான் பிரிவில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. முதல் தலைமுறை வெர்னாவாது 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டு நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிசைனில் அசத்தும் ஹுண்டாய் வெர்னா:

அதேநேரம், 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது தலைமுறை தான் வெர்னா காரின் அடையாளத்தையே மாற்றியது. 2015ம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் எடிஷனுக்கு முன்பாக அதில் பயன்படுத்தப்பட்ட ”ஃப்ளூய்டிக் ஸ்கல்ப்ட்சர்” என்ற வடிவமைப்பு பாணியே இதற்கு காரணமாகும். 2017ம் ஆண்டில் சந்தைப்படுத்தப்பட்ட மூன்றாவது தலைமுறையானது K2 ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு பெரிய மற்றும் ஸ்போர்ட்டியர் தோற்றத்துடன் கூபே மாதிரியான ரூஃப்லைன், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வெண்டிலேடட் சீட்ஸ் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டன. 

மீண்டு வருமா வெர்னா?

தொடர்ந்து 2023ம் ஆண்டு நான்காவது தலைமுறை வெர்னா கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகப்பெரிய அப்க்ரேட்கள் செய்யப்பட்டு இருந்தாலும், அதன் முந்தைய எடிஷன்கள் பெற்ற வரவேற்பையும், விற்பனையையும் இதனால் எட்டமுடியவில்லை. இதற்கு மிட்-சைஸ் செடான் வாகனங்களின் மீதான ஈர்ப்பு சரிந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இத்தகைய சூழலில் தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய், வெர்னாவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை தயார்படுத்தி வருகிறது. அதனை சாலை பரிசோதனையில் ஈடுபடுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வெளிப்புற அப்க்ரேட்கள் என்ன?

தற்போதைய தலைமுறைகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சந்தையில் நீடித்து நிற்கும் வகையில், 2026 வெர்னா எடிஷனில் தோற்றத்திற்கான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, வெளிப்புற தோற்றங்கள் மிகப்பெரிய அளவில் மூடி மறைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் அருகே சென்று கூர்ந்து கவனித்தால், திருத்தப்பட்ட ஹெக்சகனல் க்ரில் செக்சன் மற்றும் ஃப்ரண்ட் பம்பரில் லேசான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதை உணர முடியும். இது முன்புறத்தில் கூர்மையான தோற்றத்தை வழங்க உதவும் என கூறப்படுகிறது. அதோடு, ஃபாக் லேம்ப் அமைப்பும் புதியதாக உள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் உள்ள லைட்பார்கள் அப்படியே உள்ள நிலையில், அலாய் வீல்கள் மற்றும் பானெட் டிசைனும் மாற்றமின்றி தொடரக்கூடும்.

வெர்னா ஃபேஸ்லிஃப்ட் உட்புற அப்க்ரேட்கள் என்ன?

உட்புறத்தில் கர்வ்ட் டிஸ்பிளே ஒருங்கிணைக்கப்பட்ட, 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஸ்டியரிங் வீலும் புதியதாக உள்ள சூழலில், டேஷ்போர்ட், சென்ட்ரல் கன்சோல், சர்ஃபேஸ் ட்ரிம்ஸ் மற்றும் மெட்டீரியல்களும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெறுகின்றன.  அதேநேரம், தற்போதை சந்தையில் உள்ள வெர்னா எடிஷனில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் கிடைக்கக் கூடும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வரக்கூடும் என கருதப்படும் ஹுண்டாயின் புதிய வெர்னா, சற்றே விலை உயர்வையும் எதிர்கொள்ளக்கூடும். தற்போதைய எடிஷனின் ஆன் - ரோட் விலை வரம்பு சென்னையில் ரூ.13.36 லட்சத்தில் தொடங்கி ரூ.21.11 லட்சம் வரை நீள்கிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
இந்தியாவுக்கு வரப்போகும் டாப் 5 புதிய 7 சீட்டர் கார்கள்! எலக்ட்ரிக், ஹைப்ரிட் என மிரட்டல்
இந்தியாவுக்கு வரப்போகும் டாப் 5 புதிய 7 சீட்டர் கார்கள்! எலக்ட்ரிக், ஹைப்ரிட் என மிரட்டல்!
Volkswagen: இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
Hybrid SUV Discounts: ஹிட்டடித்த ஹைப்ரிட் SUV-க்கு ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடி..! மாருதியின் அதிரடி ஆஃபர் - முழு விவரம்
ஹிட்டடித்த ஹைப்ரிட் SUV-க்கு ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடி..! மாருதியின் அதிரடி ஆஃபர் - முழு விவரம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Volkswagen: இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
Embed widget