மேலும் அறிய

Kawasaki z h2 series: கவாசகி நிறுவனத்தின் z h2 சீரிஸ் பைக் வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகம்

கவாசகி நிறுவனத்தின் z h2 சீரிஸ் பைக் வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கவாசகி நிறுவனத்தின்  z h2 சீரிஸ் பைக் வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கவாசகி நிறுவன வேரியண்ட்கள் அறிமுகம்:

ஜப்பானை சேர்ந்த கவாசகி நிறுவனம் அண்மையில் எலிமினேட்டர் 400 குரூஸர் மோட்டார்சைக்கிளை, தனது நாட்டில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் அந்த மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கவாசகி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் தர நேக்ட் 2023 கவாசகி Z H2 மற்றும் Z H2 SE மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இரண்டு ஸ்டிரீட் ஃபைட்டர் மாடல்களிலும் மெட்டாலிக் மேட் கிராஃபைன் ஸ்டீல் கிரே எனும் ஒரே வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது. புதிய நிறம் மட்டுமே 2023 மாடல்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றமாக உள்ளது. மற்றபடி, இரு மாடல்களிலும் அதன் ஒரிஜினல் அம்சங்கள் அப்படியே வழங்கப்பட்டுள்ளன.

இன்ஜின் விவரங்கள்:

2023 கவாசகி Z H2 மற்றும் Z H2 SE மாடல்களில் 998சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் 197 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. புதிய  கவாசகி Z H2 சீரிசின் இரண்டு வேரியண்ட்களிலும் எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், பவர் மோட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரைடிங் மோட்கள், முழுமையான எல்.ஈ.டி லைட்டிங், புளூடூத் டிஎப்டி டிஸ்ப்ளே, பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதர சிறப்பம்சங்கள்:

அதோடு, Z H2 சீரிஸ் மாடலில் M4.32 முன்புற பிரேக் கேலிப்பர்கள், Z H2 SE மாடலில் பிரெம்போ ஸ்டைல்மா முன்புற பிரேக் கேலிபர்கள் இடம்பெற்றுள்ளன.  இதில் டுவின் எல்.ஈ.டி முகப்பு விளக்குகள், ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், அலுமினியம் ஸ்விங்ஆர்ம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. Z H2 மற்றும் Z H2 SE மாடல்களில் கவாசகி நிறுவனத்தின் "ரிவர்-மார்க்" கொண்டுள்ளன. இரு மாடல்களின் தோற்றத்திலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட புதிய நேக்ட் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

விலை விவரங்கள்:

புதிய கவாசகி Z H2 வேரியண்டின் விலை ரூ. 23 லட்சத்து 02 ஆயிரம் என்றும், கவாசகி Z H2 SE வேரியண்டின்  விலை ரூ. 27 லட்சத்து 22 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்த நபர்களுக்கான விநியோகம் தொடர்பான  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget