வைகுண்ட ஏகாதசியின் பயன்கள் சொல்லிலடங்காதன என நம்பப்படுகிறது. பெருமாள் கோயில்களில் வருடத்தில் ஒருமுறை திறக்கப்படும் பரமபத வாயிலின் படியை நாம் தாண்டிச் சென்று பெருமாளை சேவிக்கிறபோது அன்றுவரை நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வருங்காலத்துக்குத் தேவையான ஆற்றலும் வளமும் கிடைப்பதோடு இந்த உலக வாழ்வுக்குப் பின் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை தரும் வைகுண்டப் பிராப்தியும் கிடைக்கும் எனவும் இத்தகைய பாக்கியம் நமக்குக் கிடைக்கக் காரணம் மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் எனவும் நம்பப்படுகிறது.
பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி திதி. வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் ஏகாதசி திதிகள் சிறப்புமிக்கவை. புராண காலத்தில் வாழ்ந்த முரன் என்னும் அசுரன் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்திவந்தான். தேவர்கள் வேண்டிக்கொண்டதனால் மகாவிஷ்ணு முரனோடும் அவன் படைகளோடும் போரிட்டார். முரனின் படைகள் அனைத்தும் முற்றிலும் அழிந்தன. முரன் திருந்த ஒரு வாய்ப்பை நல்க விரும்பிய பெருமாள் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சென்று ஒரு குகையில் சயனம் கொண்டார் என நம்பப்படுகிறது. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத முரன் பெருமாளை வீழ்த்த வந்ததாகவும், அப்போது சயனித்துக்கொண்டிருந்த பெருமாளிடமிருந்து ஆயுதம் தாங்கிய பெண் தேவதை ஒருத்தி வெளிப்பட்டாள். அவள் முரனை தன் ஹூங்காரத்தினாலேயே சம்ஹாரம் செய்தாள். அப்போது கண்விழித்த பெருமாள் அவளை ஏகாதசி என்று பெயரிட்டு அழைத்தார். அவள் தோன்றிய நாள் தனக்கு உகந்தது என்றும் அன்று தன்னை விரதமிருந்து வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும் என்றும் வரமளித்தார் எனவும் நம்பப்படுகிறது.
ஆக இன்று ஏகாதசியன்று விரதமிருப்பதும், பெருமாளை வணங்குவதும் முக்கிய சமய நிகழ்வாக நம்பப்படுகிறது.
மேலும் பார்க்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்