"மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்படுவர் தான் மதுரை 292- வது ஆதினம். தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் அருணகிரிநாதர். மதுரை ஆதினத்தில் கடந்த 1975-ம் ஆண்டு மே-27ம் தேதி பொறுப்பேற்றார். 291-வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகருக்கு பின்பு 1980-ல் மார்ச் 14-ம் தேதி அவருக்கு எதிரான போட்டிகள் எதுவும் இல்லாமல் அன்ன போஸ்டாக மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார்.
அன்றில் இருந்து தற்போது வரை அவரது ஆன்மீக பயணம் தொடர்ந்துள்ளது. சுறுசுறுப்பான பத்திரிக்கையாளராக பணியாற்றியவர் தான் மதுரை ஆதினம். மாலை நாளிதழ் ஒன்றில் பணியாற்றிய அவர் பல எக்ஸ்கிலியூசிவ் செய்திகளை அள்ளிக் கொடுத்துள்ளார். அவருக்கு எப்போதும் புல்லட் பைக் மீது அலாதிப் பிரியமாம். அதனால் தற்போது அவர் ஓட்டிய புல்லட் பைக் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. தமிழ் மொழி மீது பற்றுக்கொண்ட ஆதினம் அருணகிரிநாதர் தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்னைக்காக கூட பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளார்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
தொடர்ந்து தமிழ் ஆராய்ச்சில் இருந்த அவர் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு சொற்பொழிவுகளில் பங்கேற்றுள்ளார். ஆதினத்தின் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுவது பெருமை என பல்வேறு கோவில் நிர்வாகங்கள் மதுரை ஆதினத்தை வைத்து கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, பழ.நெடுமாறன் உட்பட பல்வேறு திரை பிரபலங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அரசியல் தலையீடு இல்லாத இவருக்கு சசிகலா நடராஜன் மூலம் அரசியல் தலையீடும் அதிகமானது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக மாறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்பை பெற்ற ஆதீனம் அவருக்கு ஆதரவாக பல்வேறு குரல்களை எழுப்பியுள்ளார். தமிழ் மற்றும் சமய நெறிகளுக்காக குரல் கொடுத்த ஆதினம் அம்மா (ஜெயலலிதா) விற்கும் குரல் கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தையும், கடுப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து ஒரு அரசியல் சாமியாராக பார்க்கப்பட்ட ஆதினம் அருணகிரிநாதர் ஜெயலலிதா மறைவிற்கு பின் தான் யாருக்கு ஆதரவு கொடுப்பதென்று தெரியாமல் திணறிப்போனார்.
மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
அதே சமயத்தில் தான் அருணகிரிநாதருக்கு மூச்சுத்திணறல் பிரச்னைகளும் அதிகமானது. இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் மூச்சு திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில-நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மூச்சு திணறல் அதிகமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியானது.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மதுரை ஆதினம் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!