மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும், இதன்தலைவர் ஆதீனம் பீடாதிபதி என அழைக்கப்படுகிறார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.மதுரை ஆதினத்திற்கு இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர், 292 ஆவதாக அருணகிரி என்பவர் இருந்து வருகிறார். இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக நித்யானந்தாவை தேர்ந்தெடுப்பதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை நீக்கி மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாடுதுறையை சேர்ந்த சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமி என்பவரை நியமனம் செய்தார்.
இந்நிலையில் தொடர்ந்து மதுரை ஆதீனமாக ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வந்த நிலையில், மதுரை ஆதீனம் 292 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உடல் நலக்குறைவால் கடந்த சில நட்களுக்கு முன் மதுரை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
அவருக்கு ஏற்கனவே மூச்சு திணறல் பிரச்னை இருந்த நிலையில், தற்போது நுரையீரலில் 90 % பாதிப்பு ஏற்பட்டு விட்டதாகவும் அவர் ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக மூச்சுத்திணறல் ஏற்படும் போதெல்லாம் செயற்கை சுவாசத்தின் வழியாகத்தான் அவரது நுரையீரல் செயல்பட்டு வந்ததாகவும் இதற்கு மேலும் அவரது உடல் மருத்துவ உபகரணங்களின் மூலம் செயல்படுவதற்கு உடல் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்றும் மருத்துவத்துறை தரப்பில் தகவல் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை ஆதிவம் அருணகிரிநாதர் பற்றி கூடுதல் செய்திகள் இங்கே...
மதுரை தொடர்பான செய்திகள் படிக்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !