மதுரை ஆதீனம் குரு மகா சன்னிதானத்தின் அறையை தருமபுர ஆதினம் பூட்டி சீல் வைத்ததை கேட்டு மருத்துவமனையில் உள்ள மதுரை ஆதினம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் கடந்த திங்கள் அன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரை நலம் விசாரிக்க வந்த தருமபுர ஆதீனம் மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம் அருணகிரிநாதரின் அறையை பூட்டி சீல் வைத்து சென்றார். இந்த செய்தியினை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனத்திற்கு நள்ளிரவு ஆதின மட ஊழியர்கள் தெரிவித்தார்கள்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அதைக் கேட்ட மதுரை ஆதினம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி தமிழ்நாடு அரசு ஏதும் சீல் வைக்க கூறியதா அல்லது தருமபுர ஆதினம் இதில் தலையிட்டு சீல் வைத்துள்ளாரா யாருடைய அனுமதியைப் பெற்று சீல் வைத்திருக்கிறார் போன்ற கேள்விகளை எழுப்பி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார் என மதுரை ஆதீனத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -
இதற்கிடையே உடல்நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மதுரை ஆதினத்தை நேற்று தருமபுர ஆதினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களை சந்தித்து கேட்டறிந்தார். இதனையடுத்து தருமபுர ஆதினம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியை மதுரை ஆதினத்தில் நெற்றியில் இட்டார். அதற்கு பின்பாக மதுரையில் தங்கிருந்து ஆதின மடத்தை பூட்டினார் என சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை ஆதினம் உடல் நலம் மோசமாக இருந்தது என கூறப்பட்ட நிலையில் தற்போது லேசாக முன்னேற்றம் கண்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அவரது உடல் நலனில் கூடுதல் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சிகிச்சை அளித்துவருதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!