மக்கள் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தந்திருக்கிறார் - ப.சிதம்பரம்

நிதி நிலை அறிக்கையில் திமு.கழகத்தின் சமுதாய நோக்கு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது, இது பாராட்டுக்குரியது

Continues below advertisement

"தமிழ்நாடு அரசின் 2021-22 ஆண்டு நிதிநிலை அறிக்கையைப் படித்தேன். 6 மாதங்களாக நடைமுறையில் உள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அவசியமான சில திருத்தங்களைச் செய்து எஞ்சியுள்ள 6 மாதங்களுக்கு அறிக்கையை நிதி அமைச்சர் தந்திருக்கிறார். இது சிக்கலான, சிரமமான பணி. 

Continues below advertisement

நிதி நிலை அறிக்கையில் திமு.கழகத்தின் சமுதாய நோக்கு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது, இது பாராட்டுக்குரியது. தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன். பெட்ரோல் மீதான வரியில் ரூ.3-ஐக் குறைத்திருப்பது ஓர் உதாரணம். பல மக்கள் நலத்திட்டங்கள் புத்துயிர் பெற்றிருப்பதையும் வரவேற்கிறேன். பெருந்தொற்றின் தாக்கத்தில் மக்கள் இன்னும் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அளித்திருக்கிறார். இன்னும் 6 மாதத்தில் தரவிருக்கும் 2022-23 ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் பல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்" என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

Continues below advertisement