மேலும் அறிய

Aadi Amavasai 2024: நாளை ஆடி அமாவாசை! முன்னோர்களுக்கு எத்தனை மணிக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்?

Aadi Amavasai 2024: மிகவும் புண்ணியம் வாய்ந்த நாளான ஆடி அமாவாசை தினத்தில் எப்போது தர்ப்பணம் கொடுக்கலாம்? என்பது குறித்து விரிவாக காணலாம்.

 ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவதால் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும்.

பொதுவாக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் ஆகும். குறிப்பாக, ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடே தர்ப்பணம் ஆகும். ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யலாம். ஆடி அமாவாசை செய்யப்படும் தர்ப்பணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். தர்ப்பணம் செய்த பிறகு முன்னோர்களுக்கு படையலிட வேண்டும். அதேபோல, பசுமாட்டிற்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது இன்னும் சிறப்பு ஆகும்.

நாளை ஆடி அமாவாசை

இந்த சூழலில், நடப்பாண்டிற்கான ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4ம் தேதி வருகிறது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, ஆடி அமாவாசை நாளை வருகிறது. அமாவாசை திதி இன்று மாலை 4.56 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.32 வரை வருகிறது. ஒரு நாளில் சூரிய உதயத்தின்போது எந்த திதி உள்ளதோ, அந்த திதியே கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில், நாளை ( ஆகஸ்ட் 4ம் தேதி) சூரிய உதயத்தின்போதே அமாவாசை திதி வருகிறது. அதன் காரணமாகவே ஆடி அமாவாசை நாளை வருகிறது.

தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் எது?

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதையடுத்து, நாளை எப்போது தர்ப்பணம் கொடுக்கலாம்? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அந்த வகையில் ஆடி அமாவாசை நாளில் காலை 6 மணி முதல் காலை 11.55 மணி வரை தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த நேரம் ஆகும்.

ஆடி அமாவாசையான நாளை மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை எமகண்ட நேரம் ஆகும். இதனால், அந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆடி அமாவாசை நன்னாளில் காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில், நீர்நிலைகளில் தர்ப்பணம் வழங்குவது வழக்கம்.

தலைப்பு செய்திகள்

Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
Nissan Tekton Launching: க்ரெட்டா, சியாராவுக்கு செக் வைக்க வரும் 'பேபி பேட்ரோல்'.! 9-ம் தேதி மாஸாக இறங்கும் நிசான் டெக்டான்
க்ரெட்டா, சியாராவுக்கு செக் வைக்க வரும் 'பேபி பேட்ரோல்'.! 9-ம் தேதி மாஸாக இறங்கும் நிசான் டெக்டான்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 7-ம் தேதி (07.07.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 7-ம் தேதி (07.07.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
Diesel Hatchback: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
Embed widget