பூமிக்கென ஒரு தினம் - வரலாறு என்ன?
அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 1970-ல் மிகப்பெரிய எண்ணெய் கசிவு விபத்து ஏற்பட்டது.தொழிற்சாலைகள் அதிகரிப்பால் பூமி மாசுபடுவது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்த சில அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினர்.
1970-ம் ஆண்டு 20-ம் தேதி 2 கோடி பேர் கலந்துகொண்டு மாபெரும் பேரணி நடத்தினர். மனிதர்கள் பூமியை எவ்வளவு மாசுபடுத்திவருகிறார்கள் என்பதை அந்தப் பேரணியில் எடுத்துரைக்கப்பட்டது.
1990-ம் ஆண்டு ஐ.நா. சபை ‘புவி தினம்’ / பூமி தினம் கடைபிடிப்பது அங்கீகரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஏப்ரல் 22-ம் தேதி உலக புவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சம்வெளிகள், மிகப்பெரிய நிலப்பரப்பு என அனைத்தையும் பாதுகாப்பும் பொறுப்பு மக்களுக்கு இருப்பதை உணர்த்துவதற்காக இந்தநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழ மாசுபாடு ஆகியவற்றின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அதை குறைக்க அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கூடாது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.
Our Power, Our Planet.” என்பது 2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள். 2030-க்குள் ‘triple clean electricity’ என்ற இலக்கை அடைய நோக்கமாக கொண்டது. புதுப்பிக்கதக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
அந்தந்த பருவங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதை பழக்கப்படுத்தவும். முடிந்தவரை உள்ளூர் சந்தைகளில் இருந்து பொருட்களை வாங்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் இடங்களில் முடிந்த அளவுக்கு செடிகளை வளர்க்க வேண்டுமாம்.