எப்போதும் வரும் பௌர்ணமியை விடவும் ஏப்ரல் மாதம் தெரியும் பௌர்ணமி நிலா மிகவும் பெரியதாகவும், சற்றே பிரகாசமாகவும் இருக்கும். இந்த நிலாவை `பிங்க் நிலா' (Pink moon) என்று அழைக்கின்றனர்.
இந்தப் பெயரை வைத்து இன்று நிலா பிங்க் நிறத்தில் இருக்கும் என்று எண்ணி ஏமாறவேண்டாம். இந்தப் பெயர் வந்ததற்கு மற்றொரு காரணம் உண்டு.
இந்த வசந்த காலத்தில் 'wild ground phlox' என்ற பிங்க் நிற பூக்கள் முதல் முதலில் பூக்கத் தொடங்கும் காலம் என்பதால் அமெரிக்க பழங்குடியினர் அப்படி அழைக்கின்றனர்.
நிலவு, முழு நிலவை (பவுர்ணமி) அடையும்போதும், பூமிக்கு மிக அருகில் (perigee) வரும்போதும் வானில் ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது.
தனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிகவும் அருகில் வரும் காலம் என்பதால் நிலை இப்படி பெரிதாகத் தெரியும்.
மேகங்கள் இல்லாமல் வானம் க்ளியராக இருந்தால் இதை வெறும் கண்களிலேயே பார்க்கமுடியும்.
2025 Pink Moon ஏப்ரல் 12, 8:22 p.m. EDT நன்றாக தெரியும். இந்திய நேரப்படி ஏப்ரல் 13 ஞாயிறு அன்ரு 5:52 am IST காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெளர்ணமி தினத்தை கண்டு மகிழுங்கள்.
வானம் நன்றாக தெரியும் இடத்திற்கு சென்று காணுங்கள்!