'Pink Moon' அழகான புகைப்படங்கள்!
எப்போதும் வரும் பௌர்ணமியை விடவும் ஏப்ரல் மாதம் தெரியும் பௌர்ணமி நிலா மிகவும் பெரியதாகவும், சற்றே பிரகாசமாகவும் இருக்கும். இந்த நிலாவை `பிங்க் நிலா' (Pink moon) என்று அழைக்கின்றனர்.
எக்ஸ் தளத்தில் பல்வெறு நாடுகளில் எடுக்கப்பட்ட பிங்க் நிற நிலாவின் புகைப்படங்கள் வைரலாகியது.
இந்த வசந்த காலத்தில் 'wild ground phlox' என்ற பிங்க் நிற பூக்கள் முதல் முதலில் பூக்கத் தொடங்கும் காலம் என்பதால் அமெரிக்க பழங்குடியினர் அப்படி அழைக்கின்றனர்.
புகைப்பட கலைஞர் ஒருவர் பகிந்துள்ள நிலாவின் புகைப்படம்
நிலவு, முழு நிலவை (பவுர்ணமி) அடையும்போதும், பூமிக்கு மிக அருகில் (perigee) வரும்போதும் வானில் ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிங்க் நிலா
ஏராளமான நபர்கள் சமூக வலைதளங்களில் பிங்க் நிலா புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் வரும் பிங்க் நிலவு வசந்த காலத்தில் நன்மைகள் ஏற்பட வேண்டும் என்பதை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பெளர்ணமி நாள் என்பதே சிறப்பானது. பிங்க் நிலவும் காண்பதற்கு பேரழகாக இருக்கும்.