ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதன் வரலாறு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது.ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு இறந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.

முட்டை என்பது இரு பிறப்பு அல்லது மறுபிறப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவேதான் நமது பழைய வாழ்க்கையில் இருந்து, புதிய வாழ்க்கைக்கு மாறுவது புதுப்பிறப்பின் ஈஸ்டர் திருநாளின் அர்த்தத்தைத் தரக்கூடியதாக அமைகிறது.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்தினம் இரவு அவருடைய சீடர்களுடன் பஸ்கா உணவை பகிர்ந்து கொண்ட தினம் பரிசுத்த வியாழன் அதாவது மான்டி வியாழன் (Maundy Thursday) நினைவு கூறப்படுகிறது.

கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளுள் ஒன்று புனித வெள்ளி. இயேசு கிறிஸ்து மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார் என்று நம்பப்படுகிறது.

ஈஸ்டர் பண்டிகை, மக்கள் செய்த பாவங்களுக்காக, இயேசு தண்டனையை ஏற்றுக் கொண்டதாகவும், மனித குலம் வளர இயேசு தியாகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இயேசு தன்னை வருத்திக் கொண்டு, இம்மானுடம் செழிக்க தன் வாழ்வையே அர்பணித்தார்.

மூடிய கல்லறை திறந்து, வான் முழங்க, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்றைய நாளில் இயேசு பிரான் உயிர்தெழுந்தார். அதுவே `ஈஸ்டர் திருநாள்' (Easter).

ஈஸ்டர் சொல்லும் செய்தி என்னவென்றால், ’இயேசு உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் அவரோடு ஒன்றி உயிர்த்தெழுவோம். நம் பாவங்களை விட்டொழிப்போம். புதிய நல்வாழ்விற்கு தயாராவோம்.’ என்பதுதான்.

நம்மை பாவங்களில் இருந்து ரட்சிக்கும் இயேசுவின், துன்பங்களிலும், மரணத்திலும் உயிர்ப்பிலும் பங்குபெறுவோம்.

கிறிஸ்துவின் வருகையை நினைவுகூரும் நாள் இது.இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்!