ஆண்டுதோறும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகின்றது
விவசாயம், தொழில், வீடு என எல்லா இடங்களிலும் நீர் அவசியமாக இருக்கின்றது . நீர் இல்லாமல் மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர் வாழ முடியாது.
உலக தண்ணீர் தினத்தின் முக்கிய கவனம் பனிபாறைகளை பாதுகாப்பது.
காலநிலை மாற்றத்தினால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன
இதனால், எதிர்காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.
இதனை உணர்ந்து பனிப்பாறைகளை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்வது அவசியமானது
பனிப்பாறைகள் உலகளாவிய குடிநீர் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன
பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன
பனிபாறை பாதுகாப்பு என்பது எதிர்கால குடிநீர் வளங்களைப் பாதுகாப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கும் பனிப்பாறைகள் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உலக ஐக்கிய நாடுகள் தண்ணீர் அமைப்பு வலியுறுத்துகின்றது