பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் - புகைப்படங்கள்! - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், மார்ட் 19-ம் தேதி 2025 பூமிக்குத் திரும்பினார்.

இந்திய நேரப்படி மார்ச், 19 2025 அன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.

சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் திட்டமிடப்பட்ட 8 நாட்களை விட அதிக நாட்கள், அதாவது சுமார் 286 நாட்கள் விண்வெளியில் தங்க நேரிட்டது.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்ட நாசா, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு கருதி, அதே விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவதை தவிர்த்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியதை நாசாவின் நேரடி ஒளிப்பரப்பில் கண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்ற பொதுமக்கள.

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார். கடல் பகுதியில் விண்கலம் பாதுகாப்புடன் இறக்கப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் GS-15 தரவரிசை படி, அடிப்படை சம்பளம் ஆண்டுக்கு USD 1,25,133 முதல் USD 1,62,672 ( இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1.08 கோடி முதல் 1.41 கோடி வரை) வரை இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

டிப்படை ஊதியம் 1,148 அமெரிக்க டாலர்களையும் சேர்த்தால், அவர்களின் மொத்த வருமானம் 94,998 அமெரிக்க டாலர்களிலிருந்து 123,152 அமெரிக்க டாலர்கள் (சுமார் 82 லட்சத்திலிருந்து ரூ. 1.06 கோடி) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.