’Siblings Day' வரலாறு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

அமெரிக்காவில் உடன்பிறந்தவர்கள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது சகோதரத்துவம், உடன்பிறந்தவர்கள், அன்பினால் இணைந்த நண்பர்கள் சகோதர - சகோதரிகளாக இருப்பது ஆகியவற்றை கொண்டாடும் நாள்.

கிளாடியா எவர்ட் தனது சகோதரனையும் சகோதரியையும் சிறு வயதிலேயே இழந்த பிறகு, 1995 ஆம் ஆண்டு தேசிய உடன்பிறப்புகள் தினத்தை நிறுவினார். கிளாடியா தனது சகோதரி லிசெட்டின் பிறந்தநாளான ஏப்ரல் 10 ஆம் தேதியை கொண்டாட முடிவு செய்தார்.

இந்த நாளை அன்பை வெளிப்படுத்த கொண்டாடலாம். வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த உறவை கொண்டாடி மகிழ்வது, நன்றி தெரிவிப்பது இந்த நாளில் நோக்கமாகும்.

'நீங்க இல்லாம இந்த உலகத்துல நான் என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியல. நீங்க என் பக்கத்துல இருந்தா, நான் எதையும் சாதிக்க முடியும்.' என்று கூறி வாழ்த்தலாம்.

எனது வாழ்வில் சிறந்த முதல் தோழமைக்கு Siblings தின வாழ்த்துக்கள்! கடினமான சூழ்நிலைகளிலும் நீங்கள் என் பக்கத்திலேயே இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்.”என்று தெரிவித்து வாழ்த்தலாம்.

நீங்கள் நீண்ட நாட்களாக தெரிவிக்க நினைத்ததை அவர்களிடம் மனது விட்டு பேசலாம். அன்பை வெளிப்பதுவதற்கு என்ற சரியான நேரம் என்பதில்லை.

என்னுடைய எல்லா ரகசியங்களையும் அறிந்த, இன்னும் என்னை நேசிக்கும் ஒருவருக்கு உடன்பிறப்பு தின வாழ்த்துக்கள்!

அன்பானவர்களுக்கு கடிதம் எழுதலாம். தினமும் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.

” நீ என்னை சிரிக்க வைப்பது போல, என்னை யாராலும் சிரிக்க வைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் நன்றி அன்பே!’ என்று வாழ்த்தலாம்.