உலக மக்கள் மதிப்பாய்வு அறிக்கையின் படி புற்றுநோய் விகிதம் அதிகம் உள்ள நாடுகள்

Published by: ABP NADU

ஆஸ்திரேலியா

வெயில் அதிகம் உள்ளதால் புறஊதா கதிர்கள் தாக்கி மக்கள் தோல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 1,00,000 பேருக்கு 462.5 வீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்

நியூசிலாந்து

100,000 பேருக்கு 427.3 வீதம் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உணவு பழக்கங்கள், மது அருந்துதல் போன்ற காரணங்களுக்காக புற்றுநோய் வந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

டென்மார்க்

100,000 பேருக்கு 374.7 வீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய்க்கான மருத்துவ வசதுகள் அனைத்தும் இருந்தும் மக்களின் புகைப்பிடித்தல் பழக்கத்தால் மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது

அமெரிக்க ஐக்கிய நாடுகள் (U.S)

மாறும் வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் உடல் பருமன், புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாகவும் புற்றுநோய் 100,00 பேருக்கு 367 வீதமாக உள்ளது

நார்வே

100,000 பேருக்கு 357.9 வீதம் பாதிக்கப்படுகின்றர். அதிகமாக வயதானவர்களே புற்றுநோய்க்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகிறது

கனடா

உணவுப் பழக்கங்களாலும் புகைப்பிடிப்பதாலும் கனடாவில் 100,000 பேருக்கு 345.5 வீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்

அயர்லாந்து

அயர்லாந்தின் புற்றுநோய் சதவீதம் 100,000 பேருக்கு 344.7.புகைபிடித்தல், மது அருந்துதல், காய்கறிகள் சாப்பாட்டில் குறைவாக சேர்த்தல் போன்ற காரணங்களால் இங்குள்ள மக்கள் புற்றுநோயால் பதிக்கப்படுகின்றனர்

நெதர்லாந்து

இங்கே மக்கள் மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்ப்டுகின்றனர். நோயின் சதவீதம் 100,000 பேருக்கு 341.4 வீதம்

பிரான்ஸ்

மதுப்பழக்கம், புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவதால் இந்நாட்டு மக்கள் 100,000 பேருக்கு 339 வீதம் கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்

ஹங்கேரி

அதிகமாக புகைப்பிடிப்பதால் 100,000 பேருக்கு 336.7 சதவீதம் மக்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்

இந்தியா

இந்தியாவின் புற்றுநோய் சதவீதம் 100,000 பேருக்கு 97 என்ற கணக்கில் குறைவாக உள்ளது. அதிகமான மக்கள் கற்பப்பை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்