சர்வதேச உழைப்பாளர் தினம் - வரலாறு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

. 19ம் நூற்றாண்டு காலத்தில் மனித உழைப்பே பிரதானம். அந்த காலகட்டத்தில் உலகின் முக்கிய நாடுகள் ஒவ்வொன்றும் ஒன்றை, ஒன்றை அதிகாரத்திலும், வளர்ச்சியிலும் வீழ்த்த துடித்துக் கொண்டிருந்தன.

தொழிலாளர்கள் எந்தவொரு வரையறையும் இன்றி முதலாளிகள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சக்கையாக பிழியப்பட்டனர். தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கோ, அவர்களின் நலனுக்கோ எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது.

தினசரி 18 மணி முதல் 20 மணி நேரம் தொழிலாளர்கள் உழைத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனால், அவர்களின் ஊதியம் என்பது மிக மிக குறைவு.

போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களின் முதல் கோரிக்கை உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற வேண்டும் என்பதற்காக அதிக ஊதியம் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

1820, 1830 காலகட்டங்களில் தினசரி 10 மணி நேர வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலாளி வர்க்கத்திடம் தொழிலாளர்கள் போராடினர்.

காரல் மார்க்சின் வார்த்தைகளான, “ உலகம் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. பெறுவதற்கோ பொன்னான ஒரு உலகம் காத்திருக்கிறது” என்ற வாக்கியம் தொழிலாளர்கள் மத்தியில் புதிய புத்துணர்ச்சியை அளித்தது.

தொழிற்சங்கங்களின் அறிவுறுத்தல்களால் 10 மணி நேர வேலை என்பதை 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையாக வலியுறுத்தினர். ஆஸ்திரேலியாவின் கட்டிடத் தொழிலாளர்கள் “ 8 மணி நேர வேலை..! 8 மணி நேர பொழுதுபோக்கு..! 8 மணி நேர ஓய்வு” என்று துல்லியமாக வரையறுத்து போராடினர்.

1891ம் ஆண்டு மே 1ம் நாள் சிகாகோ போராட்டத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் விதமாக சர்வதேச உழைப்பாளர் தினமாக இரண்டாம் இன்டர்நேஷனல் தொழிற்சங்கம் பிரகடனம் செய்தது.

இந்தியாவில் முதன்முதலாக 1923ம் ஆண்டு மே 1 தினத்தை தொழிலாளர் தினமாக சிங்காரவேலர் என்ற நமது தமிழர் மெரினாவில் கொடியேற்றி கொண்டாடினர்.