இந்தியாவில் குளிர்காலம் தொடங்கி விட்டது குளிர்காலத்தில் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும் வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரக்காததே இதற்கு காரணம் 15 கிராம் மல்லிகை அல்லது ரோஜா இதழ்களை 1 லிட்டர் தண்ணீரில் சேர்க்கவும் இதனை 10 நிமிடங்கள் சூடேற்றவும் ஒருநாள் முழுவதும் இந்த தண்ணீரை ஆற விட வேண்டும் பூவின் இதழில் உள்ள சத்துகள் இறங்கி தண்ணீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் தண்ணீரை வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றவும் அதை 3 மணிநேரத்துக்கு ஒரு முறை முகத்தைக் கழுவ பயன்படுத்தலாம் இதனால் சருமம் பொலிவாக இருக்கும்