ஒவ்வொருவருக்கும் தூங்கும் நேரம் வேறுபடுகிறது மனிதர்கள் சுமார் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை வயதானவர்களுக்கு இது பெரும்பாலும் பொருந்துவது இல்லை குழந்தைகள் போல் நடு இரவில் விழித்துக்கொள்வார்கள், மதியம் உறங்குவார்கள். மற்றவர்களை விட காலையில் சீக்கிரமாக விழுத்துக்கொள்வார்கள் இதற்கு காரணம் மூளையின் செயல்பாடுதான் என்கிறார் அரிசோனா பல்கலைகழகத்தை சார்ந்த சாய்ராம் பார்த்தசாரதி வயதாக வயதாக, மூளையின் செயல்பாடு குறைந்துவிடுமாம் தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் இருட்டிய உடன் சுரக்கும் வயதானவர்களின் கண்களால் ஒளியை உள்வாங்க முடியாது. அதனால் அவர்கள், சூரியன் அஸ்தமனம் ஆகிவிட்டது என நினைப்பார்கள் இதனால் முன்கூட்டியே மெலடோனின் சுரக்க ஆரம்பித்துவிடும் இதனால் அவர்கள் சீக்கிரமாக தூங்கி சீக்கிரமாக விழிப்பார்கள்