பண்டைய காலத்தில் எகிப்து நாட்டு மக்கள் கருத்தடை உறைகளை பயன்படுத்தியுள்ளனர்



பிரான்ஸில் உள்ள குகை ஒன்றில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருத்தடை உறை கண்டெடுக்கப்பட்டுள்ளது



இதிலிருந்து கருத்தடை உறை பல்லாண்டு காலமாக உபயோகத்தில் இருப்பது தெரிகிறது



பழைய கால கருத்தடை உறைக்கும் இப்போது இருக்கும் கருத்தடை உறைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன



பால்வினை நோய்கள் வராமல் தடுக்க 16 ஆம் நூற்றாண்டில் கருத்தடை உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



கேப்ரியல் ஃபலோபியஸ் எனும் விஞ்ஞானி இதை கண்டுப்பிடித்துள்ளார்



1850களில் ரப்பர் தொழிற்சாலைகள் கருத்தடை உறைகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளது



நவீன கால பயன்பாட்டில் உள்ள கருத்தடை உறைகள் 1870களில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது



இதன் பிறகே லாட்டெக்ஸ் கருத்தடை உறைகள் அறிமுகம் செய்யப்பட்டது



இந்த லாட்டெக்ஸ் கருத்தடை உறைகள் 1930களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது