பொதுவாக சிறுநீர், வெளிர் மஞ்சள் அல்லது சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும்



சிறுநீரின் நிறம் நமது உடலின் ஆரோக்கியத்தைப் பற்றிய அறிகுறியாகும்



சில நேரங்களில் எந்த அறிகுறியும் இல்லாமல் நிறம் மாறலாம்



சிறுநீர் எந்தெந்த நிறத்தில் இருந்தால் ஆபத்து என்று பார்க்கலாம்



சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக மாறினால், அது ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம்



சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று காரணமாக இருக்கலாம்



சிறுநீரின் நிறம் அதிக கருமையாகவோ அல்லது ஆரஞ்சு நிறமாகவோ இருந்தால் அதுவும் நோயின் அறிகுறியாகும்



மலத்தின் நிறமும் மாறியிருந்தால் கடுமையான கல்லீரல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்



மருந்துகளை உட்கொண்டால், சிறுநீரின் நிறம் பச்சை, மஞ்சள், நீலம் போன்றவையாக இருக்கலாம்



இது போன்ற சூழ்நிலைகளில் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகுவது அவசியம்