எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? உதட்டின் வலது பக்கத்தில் மச்சமிருந்தால், அனைத்திலும் வெற்றி கிடைக்குமாம் உதட்டின் இடதுப் பக்கத்தில் மச்சம் அமைந்துவிட்டால், அவர்களுக்கு காதல் ஆசை அதிகம் இருக்குமாம் கட்டை விரலில் மச்சம் இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி நெற்றியில் மச்சம் அமைவது ஞானத்தின் அம்சத்தை குறிக்குமாம் ஆண்களுக்கு நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருப்பின் மிகுந்த செல்வங்களை பெறும் யோகம் ஏற்படுமாம் பெண்களுக்கு நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் தைரியமாக இருப்பார்களாம் பெண்களின் நெற்றியில் இடதுபுறம் மச்சம் இருந்தால், அவர்கள் முன் கோபக்காரர்களாக இருப்பார்களாம் ஆண்களுக்கு வலது கண்ணில் மச்சம் இருந்தால் அவர்கள் நண்பர்களால் ஆதாயம் பெற வாய்ப்புண்டு ஆண்களின் வலது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் மிகுதியான புகழை அடைவார்களாம்