உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடலை ஹைட்ரேட்டட் ஆக வைத்து கொள்வது அவசியம் உடற்பயிற்சியின் போது உங்கள் உடல் டீஹைட்ரேட் ஆகிவிட்டால் உடலளவிலும் மனதளவிலும் பிரச்சினைகள் வரலாம் நீங்கள் உங்கள் உடற்பயிற்சியின் போது உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்த வேண்டும் உங்கள் உடற்பயிற்சிக்கு 2 மணி நேரத்திற்கு முன் 500 மிலி தண்ணீரை குடிக்கலாம் உடற்பயிற்சியை தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் இருக்கையில் 250 மிலி தண்ணீர் குடிக்கலாம் மேலும் நீங்கள் சிறிதளவு ஸ்போர்ட் ட்ரின்க் அல்லது கஃபைன் கலந்த பானங்கள் அருந்தலாம் இது உங்கள் உடலில் இருக்கும் எலெக்ட்ரோலைட்ஸை அதிகப்படுத்த உதவும் இவற்றை அதிகமாக பருகினால் வயிற்றில் உபாதைகள் ஏற்படலாம் உங்கள் உடற்பயிற்சியின் போது ஒவ்வொரு 15-20 நிமிட இடைவெளியில் 150-250 மிலி தண்ணீர் வரை நீங்கள் குடிக்கலாம் நீங்கள் உடற்பயிற்சியை முடித்த பிறகு ஸ்மூத்தீஸ், ப்ரோட்டீன் ஷேக்ஸ் போன்றவற்றை அருந்தலாம்