தேர்வு சமயத்தில் மாணவர்கள் உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் பெற்றோர்கள்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் முக்கியமாக, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது காலையில் அவித்த உணவுகளை உண்பது நல்லது ஆறு மணி நேரத்துக்கும் குறையாமல் தூங்குவது அவசியம் டீ, காபி அவசியத்துக்கு மட்டும் எடுத்துக்கொள்ளலாம் மோர், பழச்சாறு, சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம் குளிர் பானங்களைத் தவிர்ப்பது நல்லது கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள் வீட்டு உணவையே சாப்பிடுவது நல்லது