வெள்ளி கொலுசை மூழ்கும் அளவு தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும் சிறிதளவு ஏதேனும் பல் துலக்கும் பேஸ்ட்டை கையில் எடுத்துக் கொள்ளவும் பின் பல்தேய்க்கும் ப்ரஷால் பேஸ்டில் தொட்டு கொலுசில் தேய்க்கவும் பல்தேய்ப்பது போல் கொலுசின் அனைத்து பகுதிகளிலும் தேய்க்கவும் கொலுசின் இடுக்குகளிலும் பேஸ்ட் படும்படி சாதாரணமாக தேய்க்கவும் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை இப்போது கொலுசை நல்ல தண்ணீரில் கழுவி எடுக்கவும் கொலுசின் ஈரத்தை துணியால் துடைத்து எடுக்கவும் அவ்வளவுதான் கொலுசு புதுசு போல் ஜொலிக்கும்