இதை செய்தால் வெயில் காலத்தில் ஏசியே தேவைப்படாது! வெப்பம் நிறைந்த காற்றை வெளியேற்ற உதவும் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தவும் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதை டேபிள் ஃபேன் முன் வைத்தால் ஏசி போல் சில்லென காற்று வீசும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் வெளிக்காற்று உள்ளே வருமாறு கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்த வையுங்கள் வீட்டிற்குள் இடம் இருந்தால் ஆங்காங்கே செடிகள் வைத்தால் வீடு குளிர்சியாக இருக்கும் ஸ்கிரீன் துணி, சோஃபா கவர், கட்டில் மெத்தை, தலையணை ஆகியவற்றிற்கு காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள் தேவையற்ற மின் சாதனங்களை அனைத்து வையுங்கள் மொட்டை மாடியில் நீர் தெளியுங்கள் பச்சையான தென்னை ஓலைகளை மாடியில் பரப்புவதன் மூலம் நேரடியாக வெயில் வெப்பம் தாக்குவதைத் தவிர்க்கலாம்