கை நடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அறுபது வயதுக்கு மேற்பட்டவரானால் முதுமையால் ஏற்படும் கை நடுக்கமாக இது இருக்கலாம் முதுமை அடைந்தவர்களுக்கு வரும் இன்னொரு தீவிர நடுக்கம் பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாதம் இதற்கு நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற வேண்டும் தைராய்டு சுரப்பிப் பிரச்சினைகளாலும் சில வகையான மருந்துகளாலும் கை நடுக்கம் ஏற்படும் இளம் வயதில் கை நடுக்கம் ஏற்பட மனப் பதற்றமும் ஒரு முக்கியக் காரணம் தூக்கமின்மை போன்ற காரணங்களும் இருக்கும் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் இதை சரியாக்கலாம் அதிகமாக மது குடித்தாலும் கை நடுக்கம் ஏற்படலாம் காரணம் இல்லாமலும் கை நடுக்கம் ஏற்படலாம். மருத்துவர்களை ஆலோசிப்பது சிறந்தது