காலையில் எளிதில் செரிமானமாகி, சக்தி அளிக்கக்கூடிய மிதமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது



இட்லி, கஞ்சி வகைகள், நீராகாரம், ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை



புளிப்புச் சுவையுடைய பழங்களைத் தவிர மற்ற பழங்களை காலையில் எடுத்துக்கொள்ளலாம்



அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால் அவை வயிற்றுப்புண்ணை உண்டு பண்ணும்



அல்சர் இருப்பவர்கள் வாழைப்பழம், இளநீர், டீ மற்றும் காஃபி ஆகியவற்றை வெறும் வயிற்றில் தவிர்க்கவும்



மதிய உணவில் இனிப்பு, பழங்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்



காய்கறிகள், பருப்பு சாம்பார், ரசம் மற்றும் மோர் சாப்பிடலாம்



அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்



இரவு உணவும், காலை உணவைப்போல எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருக்க வேண்டும்



இரவு உணவுக்குப் பின் டீ, காபி போன்ற பானங்களைத் தவிர்ப்பது ஆழ்ந்த உறக்கத்தை தரும்