டேம்பான்ஸ் பயன்படுத்துவது எப்படி? டேம்பான்ஸ் சின்ன பஞ்சு உருண்டை போல் இருக்கும் முதலில் உங்களுக்கான அளவில் டேம்பன்ஸை தேர்வு செய்ய வேண்டும் பின்னர், அதை பிறப்புறுப்பில் பொருத்த வேண்டும் நறுமணமூட்டும் டேம்பன்ஸை தவிர்ப்பது நல்லது நறுமணமூட்டும் டேம்பன்ஸ் பயன்படுத்தினால் பூஞ்சைத் தொற்று உண்டாக வாய்ப்புண்டு இதை ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு மாற்றுகிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும் இல்லையெனில், உதிரபோக்கில் இருக்கும் ரத்தத்துடன் உடலில் இருக்கும் பாக்டீரியா கலந்து நச்சுத்தன்மை உண்டாகும் இதனால் டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் என்ற நோய் வருவதற்கு வாய்ப்புண்டு திருமணத்திற்கு முன் இதை பயன்படுத்த விரும்புவோர் மருத்துவர்களை கட்டாயம் அணுக வேண்டும்