தென்னிந்தியர்களுக்கு பிரதான உணவே அரிசி தான் ஒருநாளைக்கு ஒரு வேளையாவது அரிசி சாப்பிட்டால் தான் பலருக்கு திருப்தியாக இருக்கும் அரிசியில் கார்போஹைட்ரேட்ஸ், ஸ்டார்ச் என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது ஆனால் அரிசியை அதிகமாக உட்கொள்வதால் உடை எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம் ஒரு மாதத்திற்கு அரிசி சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா..? கலோரிகள் குறைவதால் உடை எடை குறையலாம் கார்போஹைட்ரேட்கள் அளவு குறைவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது வைட்டமின் பி மற்றும் சில தாதுக்களில் இருந்து குறைபாடுகள் ஏற்படலாம் அரிசியை முற்றிலும் தவிர்ப்பதால் நம் உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காமல் போகலாம் அரிசியை அளவாக காய்கறிகளோடு உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கலாம்