நம் உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்று தான் ஒமேகா 2 அமிலம் ஒமேகா 3 அமிலம் நிறைந்திருக்கும் சிறப்பான உணவு என்றால் அது மீன் தான். ஒரு சில மீன் வகைகளில் மட்டுமே இந்த ஒமேகா 3 அமிலம் இருக்கும். மிகவும் பிரபலமான சால்மன் மீன் வகையில் அதிக அளவு ஒமேகா 3 அமிலம் நிறைந்துள்ளது. கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா 3 மட்டுமல்லாமல் செலினியம், மெக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. ஏழைகளின் மீன் எனப்படும் மத்தி மீனில் ஒமேகா 3 அமிலம் அதிகமாக உள்ளது தமிழ்நாட்டில் சரலமாக கிடைக்கும் நெத்திலி மீன் வகையில் ஒமேகா 3 மற்றும் பிற புரதங்கள் நிறைந்துள்ளது சூறை மீனில் ஒமேகா 3, வைட்டமின் பி 12 ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது ஹாலிபட் மீன் வகைகள் அதிக எண்ணெய் தன்மை கொண்டது. இதில் ஒமேகா 3 அமிலம் அதிகமாகவே உள்ளது. ஒமேகா 3 அமிலம் இயற்கையாக நம் உடலில் சுரக்காது என்பதால் இந்த மீன் வகைகளை சாப்பிடலாம் என கூறுகின்றனர்