அளவுக்கு மீறினால் இஞ்சியும் நஞ்சு..!



தமிழ் பாரம்பரிய மருத்துவத்தில் இஞ்சிக்கு முக்கிய பங்கு உண்டு



இஞ்சியில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது



எந்தவொரு பொருளையும் அதிகமாக உட்கொண்டால் தீமை உண்டாகும்



அவ்வாறு இஞ்சியை அளவுக்கு அதிகமாக உண்டால் என்னென்ன தீங்கு உண்டாகும் என்பதை இங்கு பார்க்கலாம்



தினமும் 4 கிராமிற்கு மேல் இஞ்சி உட்கொண்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது



அந்த வகையில் இஞ்சி அதிகமாக சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்



மேலும் அமில உற்பத்தி அதிகரித்து நெஞ்சரிச்சல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது



கர்ப்பிணி பெண்கள் இஞ்சி டீ குடிப்பதால் குமட்டல் ஏற்படலாம்



மேலும் இஞ்சி டீ குடிப்பதால் தூக்கமின்மை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது