நமக்குத் தெரியாமலேயே சிறுகச் சிறுக எதிர்மறை எண்ணங்களை வளர விட்டிருப்போம்



மனதை துயர் அடையச் செய்யும் பழைய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் நம்மை அறியாமல் மேல் எழும்பி வரும்



நீங்கள் என்ன சொன்னாலும் காது கொடுத்துக் கேட்க கூடிய நெருங்கிய நண்பரோ உறவினரோ இருந்தால் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்



உடற்பயிற்சி அல்லது பூங்காவிற்குச் சென்று நடைபயிற்சி செய்யத் தொடங்குங்கள்



உற்சாகமாக பயணம் செய்தால் ஊக்கம் வரும்



எதிர்மறை எண்ணங்களை போக்குவது துணியைத் துவைத்து காய வைப்பது போல் அத்தனை சுலபமானது அல்ல



ஆனால் துணியில் ஏற்பட்ட கறை நன்றாக துவைத்த பின் சுத்தமாவதைப் போல மனத்தையும் தெளிவாக்க முடியும்



தினமும் யோகா அல்லது தியானம் செய்யத் தொடங்கலாம்



ஒவ்வொரு கணத்தையும் சரியாக வாழ்ந்துவிட்டால், விழிப்புணர்வுடன் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் வராது



அமைதிக்கான சாவி வேறெங்கும் இல்லை, நம் கைகளில் தான் உள்ளது. திறப்பதும், மறுப்பதும் நம் விருப்பம்