வாக்கிங் செல்லும் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை! நடைப்பயிற்சி சிறந்த உடற்பயிற்சி என்றுதான் சொல்ல வேண்டும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் எடையை சரியாக பராமரிப்பதற்கு கை கொடுக்கிறது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளை சீராக பராமரிக்கிறது இயற்கையான திறந்த வெளியில் நடக்கலாம் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் நடைப்பயிற்சி செய்யும் போது, உடை மற்றும் காலணிகள் மிகவும் சௌகரியமானதாக இருக்க வேண்டும் நடைப்பயிற்சி செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும் நடைப்பயிற்சி மேற்கொண்ட உடனேயே எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்