உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் குறைவான மன அழுத்தம் முக்கியமானவை



இதையெல்லாம் செய்தும் கூட சிலருக்கு எடை குறையாது



உடலில் போதுமான வைட்டமின் டி இல்லையென்றால் இப்படி ஆகலாம்



எடை இழப்பிற்கு முயற்சி செய்பவர்கள், வைட்டமின்-டி நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டால் எடை கணிசமாக குறையுமாம்



வைட்டமின் டி, உடல் கொழுப்பை குறைக்கவும் உதவுமாம்



இதனால் உடலில் புதிய கொழுப்பு செல்கள் உருவாகாது



வைட்டமின் டி ஒன்று மட்டுமே பிற வைட்டமின்கள் போலில்லாமல் சூரிய ஒளி மூலம் கிடைக்கிறது



சருமம் சூரியனின் UVB கதிர்களுக்கு வெளிப்படும் போது கொலஸ்ட்ராலில் இருந்து வைட்டமின் டி உற்பத்தி ஆகும்



கொழுப்பு நிறைந்த மீன்கள், கடற்பாசி, முட்டையின் மஞ்சள் கரு, காளான், பால், டோஃபு, தயிர் ஆகியவற்றை உட்கொள்ளலாம்



ஆரஞ்சு ஜூஸ், சீஸ், ​சோயா, பாதாம், ஓட்ஸ், ஓக்ரா உள்ளிட்ட உணவுகளையும் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்