ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது



இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று விளையாடி வருகின்றது



இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்



நடப்பாண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனை படைத்தார்



விராட், 8 ஆவது முறையாக ஒரே ஆண்டில் 1000 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்



இதற்கு முன்பு அதிக முறை ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை அதிக முறை எட்டிய வீரர் என்ற சாதனையை சச்சினுடன் சமன் செய்திருந்தார்



கோலி, தற்போது 8 ஆவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தி சச்சினை பின்னுக்கு தள்ளியுள்ளார்



ஏற்கனவே 7 முறை ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது



நடப்பு உலகக்கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார்



இன்னும் ஒரு சதம் அடித்தால், கோலி சச்சினின் சாதனையை சமன் செய்வார்